ஜடேஜாவிடம் கேப்டன்சியைக் கொடுத்தது அவருக்கு செய்த நன்மை அல்ல - ரவி சாஸ்திரி காட்டம்
ஜடேஜாவிடம் கேப்டன்சியைக் கொடுத்தது அவருக்கு செய்த நன்மை அல்ல - ரவி சாஸ்திரி காட்டம்
ரவீந்திர ஜடேஜா
சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கப்பட்டு பிறகு கைகழுவப்பட்ட ரவீந்திர ஜடேஜா இயல்பான கேப்டன்சி திறமை உடையவர் அல்ல, தண்ணியிலிருந்து எடுத்து தரையில் வீசப்பட்ட மீன் போல் இருந்தார் என்று இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கப்பட்டு பிறகு கைகழுவப்பட்ட ரவீந்திர ஜடேஜா இயல்பான கேப்டன்சி திறமை உடையவர் அல்ல, தண்ணியிலிருந்து எடுத்து தரையில் வீசப்பட்ட மீன் போல் இருந்தார் என்று இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
தொடர் தோல்விகளால் பங்குச்சந்தையில் சிஎஸ்கேவின் பங்குகள் விலை குறையத் தொடங்கியதை அடுத்து தோனியிடமே மீண்டும் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ஜடேஜா பற்றி ரவி சாஸ்திரி ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் கூறியதாவது:
ஜடேஜா இயல்பிலேயே கேப்டன் அல்ல. எந்த ஒரு கிரிக்கெட்டிலும் அவர் கேப்டனாகவே இருந்ததில்லை. எனவே அவரிடம் போய் திடீரென குருவித் தலையில் பனங்காய் வைப்பது போல் கேப்டன்சி சுமையை ஏற்றினால் அது உண்மையில் ஜடேஜாவுக்கு செய்த நன்மை கிடையாது.
ஜட்டு மீது மக்கள் தீர்ப்பெழுதலாம், ஆனால் அது அவரது தவறல்ல. அவர் இதற்கு முன் எந்த மட்டத்திலும் கேப்டன்சி செய்தவர் அல்ல. தண்ணீரிலிருந்து வெளியே வீசப்பட்ட மீன் போல் இருந்தார், அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு வீரராக அவர் சிறந்தவர், கேப்டனாக அல்ல, காரணம் அவருக்கு அனுபவம் இல்லை, அது அவரது தவறு கிடையாது. ஜட்டு ஒரு சிறந்த ஆல்ரவுண்டர்.
எனவே அவர் தன் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தட்டும். அவரிடம் கேப்டன்சியை கொடுக்க வேண்டும் என்ற முடிவினால் சிஎஸ்கே சில போட்டிகளை ஆரம்பத்தில் இழந்தது. இப்போது நன்றாக ஆடும் சிஎஸ்கேவைப் பார்க்கும் போது முதலிலேயே விஷயங்களைச் சரி செய்திருந்தால் நிச்சயம் பிளே ஆஃப் வாய்ப்புப் பட்டியலில் இருந்திருபார்கள்.
ருதுராஜை கேப்டனாக்குவதும் சிக்கல்தான் ஏனெனில் ஒரு வீரர் எங்கிருந்து வருகிறார், அவர் இதற்கு முன்பு என்ன ஆடியிருக்கிறார். ஏதாவது கேப்டன்சி செய்திருக்கிறாரா,, கேப்டன்சிக்கான ஒரு சாதுரியம் அவரிடம் இருக்கிறதா என்பதை ஆராயமல் கொடுக்கக் கூடாது. அவர் ரன் எடுக்கிறார் என்பதற்காக, அவர்தான் அதிக ரன்கள் குவிக்கிறார் என்பதற்காக கேப்டன்சியை கொடுத்து விடக்கூடாது.
இது இந்தியாவில் நடப்பதுதான், மாநில லெவலில் மட்டுமல்ல தேசிய லெவலிலும் இத்தகைய தவறுகள் நடக்கும். ரன்கள் எடுக்கிறார் என்பதற்காக கேப்டன்சியை கொடுக்க வேண்டியது, ஆனால் அவர் கேப்டன்சியே செய்திருக்க மாட்டார். கேப்டன்சி ஒரு வித்தியாசமான ஒரு துறை, அதில் ஒரு சரளமும் சாதுரியமும் வேண்டும்.
ஆட்டத்தை சரியாகக் கணிக்கும் திறன், வீரர்களை நிர்வகிக்கும் திறமை அனைத்திற்கும் மேலாக வீரர்களுடனான் உறவு, தொடர்புப் படுத்தல் ஆகியவை மிக முக்கியம். வீரர்களுடன் மட்டுமல்ல ஊடகங்களிடமும் பேசத் தெரிய வேண்டும்.
மேலும் ஜடேஜா ஒரு சிறந்த பீல்டர், அவர் டீப் கவர், லாங் ஆஃப், தேர்ட் மேன், போன்ற இடங்களில் டீப்பில் பீல்ட் செய்து ரன்களைத் தடுப்பவர், கேப்டனானால் சர்க்கிளுக்குள் நின்று பவுலர்களை ஊக்கப்படுத்த வேண்டும், விவாதிக்க வேண்டும், எனவே இதுவும் ஒரு சிக்கல்தான்” என்றார் ரவி சாஸ்திரி.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.