2013 ஐபிஎல் தொடரில் பயங்கரமாக குடித்து விட்டு மும்பை வீரர் ஒருவர் தன்னை 15வது மாடி பால்கனியிலிருது தன்னை தொங்க விட்டதாகவும் மற்றவர்களால் காப்பாற்றப்பட்டு பிறகு தான் மயக்கமடைந்ததாகவும் யஜுவேந்திர செஹல் தெரிவித்த சம்பவம் பூதாகாரமாகியுள்ளது, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ டைம் அவுட் சேனலில் பேசிய ரவி சாஸ்திரி இது தொடர்பாக கூறியது, “இது சிரிக்கக் கூடிய் விஷயமல்ல, சிந்திக்க வேண்டிய விஷயம். சம்பந்தப்பட்ட நபர் யாரென்று எனக்குத் தெரியவில்லை, அவர் நல்ல உணர்வு நிலையில் இல்லை. அப்படியானால் அது பெரிய கவலைதான். ஒருவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது, சிலர் அதை வேடிக்கையாக நினைக்கலாம் ஆனால் எனக்கு அது வேடிக்கையாக இல்லை. அதைச் செய்ய முயற்சிப்பவர் நல்ல மன நிலையில் என்பதைக் காட்டுகிறது. அப்படி முயற்சி செய்யும் நிலையில் நீங்கள் இருக்கும் போது, தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது,
இப்படி ஒரு கொடூரமான விஷயத்தை நான் கேட்பது இதுவே முதல் முறை. இது வேடிக்கை இல்லை. இன்று அப்படி ஒரு சம்பவம் நடந்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவார், இப்போது அந்த நபரை விரைவில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பவும். வாழ்நாள் தடை, கிரிக்கெட் மைதானத்தை நெருங்காமல் இருப்பது நல்லது என்று அவருக்கு தடை போட வேண்டும் அப்போதுதான் அது எவ்வளவு வேடிக்கையானது அல்லது கொடூரமானது என்பதை அவர் புரிந்துகொள்வார்.
நீங்கள் விழிப்படைய ஒரு அசம்பாவிதம் நடக்க வேண்டும் என்று அர்த்தமல்ல, அப்படி ஏதாவது நடந்தால், நீங்கள் சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் அளிக்க வேண்டும். சூதாட்ட விவகாரத்தில், ஊழல் தடுப்புப் பிரிவினர் உங்களுக்குச் சொல்வது போல், அதிகாரிகளை அணுகி அவர்களுக்குத் தெரியப்படுத்துவது உங்கள் வேலை.” என்று ரவி சாஸ்திரி கடுமையாகக் கூறினார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.