ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை: ஆப்கான் அணியின் கேப்டனாக மாயாஜால லெக் ஸ்பின்னர் நியமனம்

டி20 உலகக்கோப்பை: ஆப்கான் அணியின் கேப்டனாக மாயாஜால லெக் ஸ்பின்னர் நியமனம்

ரஷீத் கான்.

ரஷீத் கான்.

அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை எமிரேட்சில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை மனதில் கொண்டு ஆப்கான் டி20 அணியின் கேப்டனாக லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

 • Cricketnext
 • 1 minute read
 • Last Updated :

  ஆப்கான் அணியின் துணை கேப்டனாக இடது கை பேட்ஸ்மென் நஜிபுல்லா ஜத்ரான் நியமிக்கப்பட்டுள்ளார்.

  டி20 கிரிக்கெட்டில் உலகம் முழுதும் அறிந்த புகழ்பெற்ற வீரர் ரஷீத் கான், தன் மாயாஜால ஸ்பின் பவுலிங்கினால் எதிரணி பேட்ஸ்மென்களை உலகம் நெடுக திணறடித்து வருகிறார்.

  Also Read: Euro 2020 Spain vs Italy | வெளியேறியது ஸ்பெயின் - கோல் அடித்த ஸ்ட்ரைக்கரே பெனால்டியில் சொதப்பிய சோகம்- இறுதியில் இத்தாலி

  ஏற்கெனவே ஒருமுறை கேப்டனாக நியமிக்கப்பட்டு தான் ஒரு வீரர்தான் தலைமைத்துவ பண்புகள் எனக்கு இல்லை என்று தன்னடக்கத்துடன் விலகினார் ரஷீத் கான். 2019-ல் ரஷீத் கான் 3 வடிவங்களுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

  Also Read: Virat Kohli | இப்படித்தான் ‘ஒர்க்-அவுட்’ செய்கிறார் விராட் கோலி- வீடியோ

  இவர் கேப்டன்சியை உதறியதை அடுத்து அஷ்கர் ஆப்கான் கேப்டனாக நியமிக்கபட்டார், அதாவது மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை ஆப்கான் அணி ரஷீத் கான் தலைமையில் இழக்க ரஷீத் கான் பதவியை உதறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டி20 உலகக்கோப்பையில் குரூப் பி-யில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. தகுதிச் சுற்றிலிருந்து 2 அணிகள் தகுதி பெறும்.

  Also Read ‘ஹேப்பி பர்த் டே கேப்டன் கூல் தோனி..’ - ட்விட்டரில் தெறிக்கவிடும் தோனி ஆர்மி

  இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கியதாலும் மூன்றாம் அலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்ததாலும் போட்டிகளை இந்தியா நடத்தினாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cricket, Rashid Khan, T20