விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » IPL RAPPER KRISHNA KAUL ACCUSES IPL OF PLAGIARISING HIS SONG FOR ITS ANTHEM VJR

தனது பாடலை ஐ.பி.எல் திருடி விட்டது... பிரபல ராப் பாடகர் குற்றச்சாட்டு

IPL 2020 | ஐ.பி.எல் இன் 13வது சீசனுக்கான பாடல் கொஞ்சம் சிக்கலில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தனது பாடலை ஐ.பி.எல் திருடி விட்டது... பிரபல ராப் பாடகர் குற்றச்சாட்டு
  • Share this:
நாடு முழுவதும் ஐபிஎல் போட்டியை காண கோடிக்கணக்கான மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. வரும் செப்டம்பர் 19 முதல் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

மேலும் தொலைக்காட்சியில் ஐபிஎல் அங்கீகார பாடல் ஏற்கனவே ஒலிக்க தொடங்கிவிட்டது. இந்த சூழலில் ஐ.பி.எல் இன் 13வது சீசனுக்கான பாடல் கொஞ்சம் சிக்கலில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஐபிஎல் பாடலை உருவாக்க தனது 2017ம் ஆண்டு வெளியான பாடலான "தேக் கவுன் ஆயா வாபாஸ்" பாடலை தழுவி ஐ.பி.எல் பாடல் உருவாக்கியுள்ளதாக ராப் பாடகர் கிருஷ்ணா கவுல் குற்றம் சாட்டியுள்ளார்.


ஐபிஎல் பாடலுக்காக உங்கள் பாடலை எடுத்துக் கொள்கிறோம் என்றும் என்னுடைய சம்மதத்தை எதையும் கேட்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எனது சக கலைஞர்கள் மற்றும் நண்பர்களே இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நான் கேட்டுக்கொள்கிறேன், இந்த குற்றத்தை செய்த யாரையும் விட போவதில்லை" என்றும் அவர் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.மேலும், ஐ.பி.எல் பாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப்பட்டது. ராப்பர் கிருஷ்ணா அவர்கள் திங்கட்கிழமை அன்று ட்விட்டரில் ஐபிஎல் தனது 2017ம் ஆண்டு வெளியான பாடலை சட்டவிரோதமாக எடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மார்ச் 2017ல் யூடியூப்பில் முதன்முதலில் தான் "தேக் கவுன் ஆயா வாபாஸ்" என்ற பாடலை நான் பதிவேற்றினேன் என்றும், பதிவேற்றிய பின்னர் தற்போது வரை 7.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 10ம் தேதி நடைபெறுகிறது.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading