ரஞ்சியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியும் பரிதாபம்:  உனாட்கட்டுக்கு தடையாக இருக்கும் வயது

ஜெய்தேவ் உனாட்கட்

இந்திய அணித் தேர்வு விவகாரத்தில் ஒரு சிலருக்கு ஒரு விதிமுறை வேறு சிலருக்கு வேறு விதிமுறை என்ற வழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. திறமைக்குத்தான் முதலிடம் என்றால் வயது ஒரு பொருட்டல்ல என்பது சிலர் அணியில் நீடிப்பதற்கான காரணமாகக் கூறப்படுகிறது

 • Share this:
  இந்திய அணித் தேர்வு விவகாரத்தில் ஒரு சிலருக்கு ஒரு விதிமுறை வேறு சிலருக்கு வேறு விதிமுறை என்ற வழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. திறமைக்குத்தான் முதலிடம் என்றால் வயது ஒரு பொருட்டல்ல என்பது சிலர் அணியில் நீடிப்பதற்கான காரணமாகக் கூறப்படுகிறது, ஆனால் ஜெய்தேவு உனாட்கட் விஷயத்தில் இது தலைகீழ், திறமை இருக்கிறது ஆனால் வயதாகி விட்டது என்று புறக்கணிக்கப்படுகிறார்.

  சவுராஷ்ட்ரா அணிக்காக மிகவும் சீராக வீசி வருபவர் உனாட்கட், 2019-20 சீசனில் தனி நபரகா சவுராஷ்ட்ரா அணியை சாம்பியன் பட்டத்துக்கு இட்டு சென்றார் 67 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

  அனுபவமிக்க ஒரு இடது கை வீச்சாளர் அணிக்கு பக்கபலம் என்ற போதும் உனாட்கட் புறக்கணிக்கப்பட்டார், ஆஸ்திரேலியா தொடருக்கும் இவர் தேர்வாகவில்லை, இப்போது இங்கிலாந்து தொடருக்குஜ் ரிசர்வ் பவுலராகக் கூட தேர்வாகவில்லை.
  இதனால் உனாட்கட் கடும் ஏமாற்றமடைந்துள்ளார். அவரது புண்ணில் உப்பைத் தடவுவது போல் உனாட்கட் இனி இந்தியாவுக்கு ஆட முடியாது, அதற்கான வயது தகுதி அவருக்கு இல்லை என்று ஒரு தேர்வாளர் கூறியுள்ளார்.

  ரஞ்சியில் அதிக விக்கெட்டுகள்:

  உள்நாட்டு கிரிக்கெட் தான் இந்திய அணிக்குத் தேர்வாவதற்கான அளவுகோல் என்றால் உனாட்கட் கடந்த ரஞ்சி தொடரில் 67 விக்கெட்டுகளை 10 போட்டிகளில் அதுவும் மிக சிக்கனமான 13.27 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 28 பந்துகளுக்கு 1 விக்கெட் என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். சவுராஷ்ட்ரா அணி தன் முதல் ரஞ்சி கோப்பையை வெல்ல இவரது பங்களிப்பு எக்கச்சக்கம்.
  குஜராத்திற்கு எதிரான அரையிறுதியில்  10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், அதுவும் 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகள். தமிழ்நாடு அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  ஒரே சீசனில் 67 விக்கெட்டுகள் என்பது ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளுக்கான உள்நாட்டு சாதனையாகும். இடது கை ஸ்பின்ன்ர் அஷுடோஷ் அமான் 2018-19 சீசனில் 68 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இவரையாவது கேள்விப்பட்டிருக்கிறோமா இல்லை. இவரும் தேர்வு செய்யப்படவில்லை.

  உனாட்கட் தனது 10 ஆண்டுகள் உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் 2010-2020 வரை 89 போட்டிகளில் 327 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 23.21.
  முதல் தர கிரிக்கெட்டில் இந்தியா ஏ அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியில் மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்தில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

  வலுவான தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இவருக்கு அறிமுக வாய்ப்பு அளிக்கப்பட்டு விக்கெட் இல்லாமல் முடிந்தார். அதுவும் செஞ்சூரியன் மைதானத்தில். மேலும் ஜாகீர் கான் 2014 வரை ஆடியதால் உனாட்கட்டினால் இந்திய அணிக்குள் ஊடுருவ முடியவில்லை. இந்தியாவுக்காக 7 ஒருநாள் போட்டிகளில் ஆடி உனாட்கட் 8 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

  ஐபிஎல் கிரிக்கெட்டிலும் இவர் ஒரு குறிப்பிடத்தகுந்த நம்பகத்தன்மையுள்ள பவுலராகவே திகழ்ந்து வருகிறார். பின் ஏன் இவரை தேர்வு செய்யவில்லை?

  இது குறித்து சவுராஷ்ட்ரா அணியின் பயிற்சியாளரும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஸ்பின்னருமான கார்சன் காவ்ரி கூறும்போது, “ரஞ்சி இறுதியின் போது இந்திய அணித்தேர்வாளர் ஒருவரை சந்தித்தேன் அவரிடம் 67 விக்கெட்டுகளை ஒரு சீசனில் வீழ்த்திய உனாட்கட்டை இந்தியா ஏ அணியில் கூட தேர்வு செய்ய மாட்டீர்களா என்று வினவினேன், அதற்கு அவர் உனாட்கட் இனி இந்திய அணிக்கு தேர்வாவது கடினம்.
  30 சிறந்த வீரர்கள் பற்றி பரிசீலித்த போது உனாட்கட் பெயர் பரிசீலனைக்கே வரவில்லை.

  30 வயதாகப் போகிறது. எனவே இளம் வீரர்களிடத்தில் முதலீடு செய்தால் அவர்கள் 8-10 ஆண்டுகள் ஆடுவார்கள், இனி உனாட்கட் வந்து எத்தனை ஆண்டுகள் ஆட முடியும், எனவே வயது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டது என்றார்” என காவ்ரி வருந்தினார்.

  இந்நிலையில் சற்றும் மனம் தளராத ஜெய்தேவ் உனாட்கட், இலங்கை செல்லும் இளம் இந்திய அனியில் தனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்.
  Published by:Muthukumar
  First published: