சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை களத்தில் பார்த்ததும் ராஜஸ்தான் அணி இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கையெடுத்து வணங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஐ.பி.எல் 13-வது சீசனின் 4-வது போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் 216 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சி.எஸ்.கே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தப் போட்டிக்கு முன்னர் மகேந்திர சிங் தோனி மைதானத்தில் வரும் போது அவரை முதன்முறையாக களத்தில் பார்த்த ராஜஸ்தான் அணியின் இளம்வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சந்தோஷத்தில் கையெடுத்து வணங்கினார். எதிரணி வீரர் என்று கூட நினைக்காமல் தோனியின் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக அவர் வணங்கிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
— Dhoni Fan (@mscsk7) September 22, 2020
பதவியும், மரியாதையும் கேட்கமால் வராது எங்க தல தோனி ஒருவருக்கு தான் என்று பல ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளை சந்தித்த தோனி 29 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் தோனி ஹட்ரிக் சிக்ஸர் அடித்து தோல்வியிலும் ரசிகர்களை மகிழ வைத்தார்.
RESULT DATA:
MOST SIXES:
சி.எஸ்.கே இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் செப்டம்பர் 25ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் உடன் மோத உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.