• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • RCB vs RR: ஐபிஎல் வாழ்வா சாவா ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு வில்லனாக மாறிய பெங்களூரு!

RCB vs RR: ஐபிஎல் வாழ்வா சாவா ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு வில்லனாக மாறிய பெங்களூரு!

RCB Captain Virat kohli

RCB Captain Virat kohli

150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியில் விராட் கோலியும் - படிக்கல்லும் ஓபனர்களாக களம் கண்டனர். 

  • Share this:
    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது பெங்களூரு அணி. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி ராஜஸ்தானை அடக்கிய பெங்களூருவின் வெற்றிக்கதை இதோ உங்களுக்காக...

    ஐக்கிய அரபு அமீரகத்தில் களைகட்டி வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

    இதன் 43வது லீக் ஆட்டத்தில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் - சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க வாழ்வா சாவா என்ற நிலையில் களமிறங்கினர். துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ராஜஸ்தான் பேட்டிங்:

    அதன்படி ராஜஸ்தான் அணியில் லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் ஆரம்பத்திலிருந்தே பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இதனால் பவர் பிளேயில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் 31 ரன்னில் ஆட்டம் இழக்க லிவிஸ் அதிரடியாக விளையாடி அரை சதத்தை நிறைவு செய்தார்.

    Also Read:   ரெய்டு என்ற பெயரில் போலீசார் என் கணவரை அடித்துக் கொன்றுவிட்டு கொலையை மறைத்துள்ளனர் – மனைவி கண்ணீர்.. நடந்தது என்ன?

    பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 19 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழந்து 149 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு தரப்பில் பர்பிள் கேப் நாயகன் ஹர்சல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    150 ரன்கள் எடுத்தால் வெற்றி:

    150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியில் விராட் கோலியும் - படிக்கல்லும் ஓபனர்களாக களம் கண்டனர்.  படிக்கல் சற்று அதிரடி காட்டி 22 ரன்னில் முஸ்தபிஷுர் பந்தில் போல்டாகி வெளியேறினார். இவரை தொடர்ந்து கேப்டன் விரா 25 ரன்னில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த விக்கெட் கீப்பர் பரத் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டனர். 35 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசி 44 ரன்கள் குவித்தார் பரத். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார் மேக்ஸ்வெல்.

    Also Read:  ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா – அதிர்ச்சியில் பெற்றோர்கள்

    17 பந்துகள் மீதம் இருக்கும் போதே அசால்டாக வெற்றி இலக்கை எட்டி பெங்களூரு அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.  இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளோடு புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை தக்க வைத்ததுடன் பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

    4 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து எதிர் அணியின் ரன் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த பெங்களூரு வீரர் சஹல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: