வாத்தி கம்மிங் பாடலுடன் சஞ்சு சாம்சனுக்கு மாஸ் காட்டி வீடியோ வெளியிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

வாத்தி கம்மிங் பாடலுடன் சஞ்சு சாம்சனுக்கு மாஸ் காட்டி வீடியோ வெளியிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன்

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலில் விஜய் முகத்துக்கு பதிலாக சஞ்சு சாம்சன் முகத்தை வைத்து எடிட் செய்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

 • Share this:
  ஐ.பி.எல் 2021 போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் தொடக்க போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும் 2-வது போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்தாண்டு ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இந்தாண்டு இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த பிசிசிஐ முனைப்பு காட்டி வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி ஐ.பி.எல் தொடர் நடைபெற உள்ளது.

  ஆனால் அனைத்து உள்ளூர் அணிகள் மோதும் போட்டியும் வேறு மாநில மைதனாத்தில் நடைபெறுவது போன்று அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, எல்லா ஐ.பி.எல் அணிகளும் போட்டிகளுக்குத் தயாராகிவருகின்றன. குறிப்பாக, அணிகள் டிவிட்டர் பக்கங்களும் அணி ரசிகர்களை உத்வேகத்துடன் வைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன. பொதுவாக, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையான வீடியோக்கள், மீம்கள், வீரர்களின் பயிற்சி படங்களைப் போட்டு ரசிகர்களை உத்வேகமாக வைத்திருக்கக் கூடிய அணிகள்.


  அந்தவகையில் ஐ.பி.எல் அட்டவணை வெளியிட்ட உடனேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தல் வீடியோவை வெளியிட்டுள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலில் விஜய் முகத்துக்கு பதிலாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முகத்தை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவுக்கு பலரும் ட்விட்டரில் நகைச்சுவையாக கமெண்ட் செய்துவருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: