Home /News /sports /

லெஜண்ட் சுனில் கவாஸ்கரையே கிண்டல் செய்யலாமா? தராதரமற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

லெஜண்ட் சுனில் கவாஸ்கரையே கிண்டல் செய்யலாமா? தராதரமற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

sunil gavaskar

sunil gavaskar

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக செம உதை வாங்கியதைப் பற்றி கவலைப்படாத ராஜஸ்தான் ராயல்ஸ், லெஜண்ட் சுனில் கவாஸ்கர் கூறிய ஒரு கருத்தை வைத்து அவரைக் கிண்டல் செய்ய, வரலாறு அறியாத நெட்டிசன்கள், கவாஸ்கர் யார் என்று அறியாத ரசிகர்களும் சுனில் கவாஸ்கர் என்ற லெஜண்டை தராதரமின்றி கிண்டல் செய்த கொடுமை நடந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக செம உதை வாங்கியதைப் பற்றி கவலைப்படாத ராஜஸ்தான் ராயல்ஸ், லெஜண்ட் சுனில் கவாஸ்கர் கூறிய ஒரு கருத்தை வைத்து அவரைக் கிண்டல் செய்ய, வரலாறு அறியாத நெட்டிசன்கள், கவாஸ்கர் யார் என்று அறியாத ரசிகர்களும் சுனில் கவாஸ்கர் என்ற லெஜண்டை தராதரமின்றி கிண்டல் செய்த கொடுமை நடந்துள்ளது.  பணம் பத்தும் செய்யலாம்தான். ஆனால் சுனில் கவாஸ்கர் எதிர்த்து ஆடிய ஒரு 15-20 பவுலர்களை கண்டாலே என்ற பிளேயர்கள் கவச குண்டலத்துடன் தான் இறங்குவார்கள்.

    நடந்தது என்னவெனில், கவாஸ்கர் எப்போதும் ஒரு சிக்சரோ, 2 சிக்சரோ ஒரு வீரர் அடித்து விட்டு அடுத்து சிங்கிள் எடுத்தால் ஸ்மார்ட் கிரிக்கெட் என்று பாராட்டுவார், அது அவரது கிரிக்கெட் தியரி. இதில் கேலி செய்ய எதுவுமில்லை. ஆனால் கவாஸ்கர் சொன்ன இதைத் தனது ட்விட்டர் ஹேண்டிலில் கவாஸ்கர் படத்துடன் பதிவிட எதுவும் அறியாத இந்த நெட்டிசன்கள் என்பவர்கள் கவாஸ்கரை கேலி மழை பொழிந்துள்ளனர்.

    கவாஸ்கரின் வர்ணனையையே அவர்கள் கிண்டல் செய்யத் தொடங்கினர், ஒரு சிலர் எந்த ஒர் மட்டுமரியாதையும் இன்றி இந்த கிழவரை கமேண்டரி பாக்சிலிருந்து தூக்கி எறியுங்கள் அய்யா, வேஸ்ட் லக்கேஜ் என்றெல்லாம் கிண்டல் செய்கின்றனர். மிகவும் வேதனையான ஒரு நிகழ்வாகும் இது.



    கவாஸ்கர் எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், கபில்தேவ் 1983 உலகக்கோப்பையை இங்கிலாந்தில் வென்றார் என்றால் கவாஸ்கர் 1985-ல் ஆஸ்திரேலியாவில் மினி உலகக்கோப்பையை வென்றவர். ஆஸ்ட்ரலேசியா கோப்பையில் இந்தியா வெறும் 125 ரன்களுக்கு மடிய மீண்டும் 87 ரன்களுக்கு பாகிஸ்தானைச் சுருட்டியதில் 4 கேட்ச்களை எடுத்தவர்.



    வெஸ்லி ஹால், கிரிபித், தொடங்கி கார்னர், ராபர்ட்ஸ், ஹோல்டிங், பெர்னர்ட் ஜூலியன், வான்பன் ஹோல்டர், மால்கம் மார்ஷல் அம்புரோஸ், கார்ட்னி வால்ஷ், வரை பயங்கர வெஸ்ட் இண்டீஸின் வேகப்பந்து வீச்சை சந்தித்தவர்.இந்தப் பக்கம் பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால் அசீப் மசூத் தொடங்கி சர்பராஸ் நவாஸ், இம்ரான் கான், வாசிம் அக்ரம், சிகந்தர் பக்த், இங்கிலாந்தில் ஜான் ஸ்னோ, கிறிஸ் ஓல்ட், பாப் வில்லிஸ், இயன் போத்தம், ஆஸ்திரேலியாவை எடுத்துக் கொண்டால் டெனிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், ராட்னி ஹாக், ராட் மெக்கர்டி, லென் பாஸ்கோ, நியூசிலாந்தை எடுத்துக் கொண்டால் ரிச்சர் ஹாட்லி. என்று பலதரப்பட்ட வேகப்பந்து ஸ்விங் பந்து என்று ஹெல்மெட் போடாமல் எதிர்கொண்டு உடல் கவசம் எதுவும் இல்லாமல் ஆடி 34 சதங்களை எடுத்து முதன் முதலில் 10,000 டெஸ்ட் ரன்களை எட்டிய இமாலய வீரரை கிண்டல் செய்வது காலத்தின் கோலம்.

    அணிகள் தங்கள் ரசிகமணிகளை எண்டர்டெய்ன் செய்ய வேண்டுமென்றால் அதற்குப் பல வழிகள் இருக்கின்றன, இந்திய கிரிக்கெட்டை வடிவமைத்த லெஜண்டகளை கேலிப்பொருளாக்கி அதில் லாபமடைவதை நிறுத்திக் கொள்வதை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, IPL 2022, Rajasthan Royals

    அடுத்த செய்தி