சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா.

எங்கள் அணியிலும் தொடக்கத்தில் ஆட சில வீரர்கள் உள்ளனர், இந்நிலையில் சிஎஸ்கே கேட்டனர், கொடுத்து விட்டோம்.

 • Share this:
  தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பாவை மாற்றியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இது முழுக்க முழுக்க ரொக்கப் பரிமாற்றத்தில் நடத்தப்பட்டது.

  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ராபின் உத்தப்பா 2020 சீசனில் நுழைந்து 12 போட்டிகள் ஆடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் இவரை டிசம்பர் 2019-ல் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த ஐபிஎல் போட்டியில் பல நிலைகளில் இறங்கிய ராபின் உத்தப்பா 196 ரன்களை மட்டுமே எடுத்தார். ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை.

  இந்நிலையில் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுள்ளதால் அவரது இடத்தை உத்தப்பா சிஎஸ்கே அணியில் தொடக்கத்தில் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முரளி விஜய்யையும் சிஎஸ்கே விடுவித்தது.

  இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகி கூறும்போது, “பங்களிப்புக்காக ராபின் உத்தப்பாவுக்கு நன்றி. உலகக்கோப்பை வின்னர்ஸ் செஷனில் அவர் ஆற்றிய உரை அபரிமிதமானது.

  எங்கள் அணியிலும் தொடக்கத்தில் ஆட சில வீரர்கள் உள்ளனர், இந்நிலையில் சிஎஸ்கே கேட்டனர், கொடுத்து விட்டோம். சிஎஸ்கேவுக்காக சிறப்பாக ஆட ராபின் உத்தப்பாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

  இது தொடர்பாக ராபின் உத்தப்பா கூறும்போது, “ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான சீசனை நான் மகிழ்ச்சியுடன் கொண்டாடினேன். இப்போது சிஎஸ்கே வாய்ப்புக் கிடைத்துள்ளது, இது எனக்கு உற்சாகத்தை அதிகப்படுத்தியுள்ளது” என்றார்.
  Published by:Muthukumar
  First published: