முகப்பு /செய்தி /விளையாட்டு / #MIvsRR | மும்பை இந்தியன்ஸுக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!

#MIvsRR | மும்பை இந்தியன்ஸுக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!

#MIvsRR

#MIvsRR

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.

  • 1-MIN READ
  • Last Updated :

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான ஐபிஎல் 2021 தொடரின் 24வது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸின் ஜோஸ் பட்லர் மற்றும் யஷவி ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்ப்ளே முடிவில் 50 ரன்களை எடுத்தது. பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுக்காத இந்த ஜோடியை 8வது ஓவரில் ராஹுல் சஹர் பிரித்தார்.

3 பவுண்டரி, 3 சிக்ஸர் என 32 பந்துகளில் 41 ரன்கள் குவித்த ஜோஸ் பட்லரை குவிண்டன் டி காக் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். இதன் பின்னர் களத்திற்கு வந்த சஞ்சு சாம்சனும் அதிரடியாக ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.

#MIvsRR

9 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 83 ரன்கள் அடித்தது, இதனையடுத்து அதிரடியாக ஆடி வந்த யஷவி ஜெய்ஸ்வாலையும் ராகுல் சஹர் காலி செய்தார். பவுலிங் செய்த சஹரிடமே கேட்சாகி யஷவி ஜெய்ஸ்வால் வெளியேறினார். அவர் 20 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி என 32 ரன்கள் அடித்தார். இதனை தொடர்ந்து சஞ்சு சாம்சனுடன், சிவம் துபே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று மேற்கொண்டு விக்கெட் விழாதபடி ஆடியது.

ராஜஸ்தான் அணி 150 ரன்களை நெருங்கிய நிலையில் சஞ்சு சாம்சனை க்ளீன் போல்டாக்கினார் ட்ரெண்ட் பவுல்ட். சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். அடுத்த ஓவரிலேயே சிவம் துபேயை ஜஸ்பிரித் பும்ரா அவுட் ஆக்கினார். இறுதிக் கட்டத்தில் டேவிட் மில்லரும், ரியான் பராகும் தங்கள் பங்குக்கு கடைசி ஓவரில் ஆளுக்கு ஒரு பவுண்டரி அடித்ததால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வருகிறது.

First published:

Tags: IPL 2021, Rajasthan Royals