• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • MI vs RR | மும்பையிடம் சொற்ப ரன்களில் சுருண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

MI vs RR | மும்பையிடம் சொற்ப ரன்களில் சுருண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

IPL 2021

IPL 2021

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்களை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 51-வது லீக் போட்டியில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் சார்ஜா மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்றைய போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும் முக்கியத்துவமானதாகும்.

    ஆனால் ராஜஸ்தான் தொடக்கம் முதலே மும்பை அணியிடம் விக்கெட்களை பறிகொடுத்து வந்தது. ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் 50 ரன்களுக்குள் அவுட்டாகினர். தொடக்க வீரர் எவின் லூயிஸ் 24 ரன்கள் அடித்ததே அதிகப்பட்ச ரன்களாக இருந்தது.

    ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி பவுலர் நாதன் குல்டர் நைல் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் நஷீம் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் விளையாடி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: