• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு... சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம்

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு... சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம்

CSK vs RR

CSK vs RR

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அபுதாபி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    சிஎஸ்கே அணி ஏற்கனவே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டதால் போட்டியின் முடிவு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்ய இன்றைய போட்டி மிகவும் முக்கியமானதாகும்.

    சென்னை - ராஜஸ்தான் அணிகள் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் சென்னை 15 முறையும் ராஜஸ்தான் 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

    சென்னை அணியில் தீபக் சாஹருக்கு பதிலாக கேஎம் அஷிப் அணியில் இடம் பெற்றுள்ளார். தீபக் சாஹர் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். மேலும் பிராவோக்கு பதிலாக சாம் கரண் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சிஎஸ்கே அணி : ருதுராஜ், டூ-பிளெசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், சர்துல் தாகூர், கேஎம் அஷிப், ஜோஸ் ஹசில்வுட்

    ராஜஸ்தான் அணி : எவின் லூயிஸ், யாஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், சிவம் துபே, கிளன் ப்ளிப்ஸ், ராகுல் திவாட்டியா, மயங்க் மார்கண்டே, சேட்டன் சாக்கர்யா, முஸ்தபிர் ரகுமான்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: