முகப்பு /செய்தி /விளையாட்டு / பஞ்சாப்பை வீழ்த்திய ராஜஸ்தானுக்கு மகிழ்ச்சி... ஆனால் சஞ்சு சாம்சனுக்கு சோகம்

பஞ்சாப்பை வீழ்த்திய ராஜஸ்தானுக்கு மகிழ்ச்சி... ஆனால் சஞ்சு சாம்சனுக்கு சோகம்

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

PBKS vs RR | பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்று ராஜஸ்தான் அணி மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஒரு சோகமான செய்தி கிடைத்துள்ளது.

ஐபிஎல் 2021 தொடரின் 32-வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும் இறுதி ஓவர்களில் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி ராஜஸ்தான் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார்கள். இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடியது.

கேப்டன் கே.எல்.ராகுல் 49 ரன்களும் மயங்க் அகர்வால் 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் 2 விக்கெட்களை மட்டும் இழந்திருந்த நிலையில் வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 8 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 19 ஓவரில் பஞ்சாப் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Also Read : சன்ரைசர்ஸ் வீரர் நடராஜனுக்கு கொரோனா

இதனால் கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கார்திக் தியாகி அருமையாக பந்துவீசி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ராஜஸ்தானை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஓவர் ரேட் விதிமுறை மீறல் காரணமாக ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக சஞ்சு சாம்சனுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: IPL 2021, News On Instagram