• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • PBKS vs RR | யாராலும் நம்ப முடியாத வெற்றி... கடைசி ஓவரில் ட்விஸ்ட் கொடுத்த கார்த்திக் தியாகி

PBKS vs RR | யாராலும் நம்ப முடியாத வெற்றி... கடைசி ஓவரில் ட்விஸ்ட் கொடுத்த கார்த்திக் தியாகி

IPL 2021

IPL 2021

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

  • Share this:
    பஞ்சாப் போட்டி என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் அதற்கு இப்படி ஒரு ட்வீஸ்டை கடைசி ஓவரில் யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். பஞ்சாப் அணி வெற்றி பெற்று விட்டது, எல்லாரும் கிளம்புங்க என்று அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்த போது கடைசி ஓவரில் ராஜஸ்தான் பந்துவீச்சாளர் கார்த்தி தியாகியின் பந்துவீச்சு அனைவரையும் வாயடைக்க வைத்து விட்டது.
    அதுவரை அதிரடி காட்டி வந்த பஞ்சாப் கடைசி ஓவரில் கார்த்தி தியாகியின் பந்துவீச்சில் பெட்டி பாம்பாக அடங்கியது. 4 ரன்கள் அடித்தால் வெற்றி, கையில் 8 விக்கெட்கள் கையிருப்பு என கம்பீரமாக இருந்தது.

    கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி வீசினார். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. அடுத்த பந்தில் மர்க்ரம் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் பூரன், சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளிறேினார். இதனால் 3 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 4-வது பந்தை எதிர்கொண்ட ஹோடா ரன் எடுக்கமால் போனார். 5-வது பந்தில் ஹோடாவும் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நெருக்கடி உருவானது. கடைசி பந்தை ஃபேபியன் ஆலன் எதிர்கொண்டார். ஆனால் கடைசி பந்தையும் சிறப்பாக வீசிய கார்த்திக் தியாகி ரன் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். கடைசி ஓவரில் ஒரே ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார் கார்த்திக் தியாகி. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் சிறப்பான பர்டனர்ஷிப் அமைத்து 100 ரன்கள் கடந்தனர். பஞ்சாப் அணி 120 ரன்கள் எடுத்த போது தான் முதல் விக்கெட் இழந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் அரைசத்தை தவறவிட்டார். மயங்க் அகர்வால் 47 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

    பஞ்சாப் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும் எய்டன் மர்க்ரம் மற்றும் நிக்கோலஸ் பூரன் அதிரடியை தொடங்கினார்கள். ஆனால் கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுக்க முடியாமல் பரிதாபமாக பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: