ஐபிஎல் 2021: ஸ்டீவ் ஸ்மித்தைக் கழற்றி விட ராஜஸ்தான் ராயல்ஸ் பரிசீலனை; சஞ்சு சாம்சன் கேப்டனாக வாய்ப்பு

ஸ்டீவ் ஸ்மித். (IPL)

கடந்த முறை 2018 ஏலத்தின் போது ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.12.5 கோடிக்கு ராயல்ஸ் தக்க வைத்தது.

 • Share this:
  பிப்ரவரி மாதம் ஐபிஎல் 2021-க்கான மினி ஏலம் நடைபெறுவதையடுத்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் விடுவிக்க பரிசீலித்து வருகிறது.

  தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை தயார் செய்து கொண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் வெளியிடவிருக்கிறது.

  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்மித்தின் தலைமையில் யுஏஇ-யில் நடந்த 2020 ஐபிஎல் தொடரில் நன்றாகத் தொடங்கி கடைசியில் சொதப்பி கடைசி இடத்தில் முடிந்தது.

  ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் குறித்தும் நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது 14 போட்டிகளில் 311 ரன்களை எடுத்தார். ஆனால் ஸ்ட்ரைக் ரேட் 131. இதில் 3 அரைசதங்களை அவர் எடுத்தார்.

  2008-ல் ஷேன் வார்ன் தலைமையில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அதன் பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு 2013, 2015 மற்றும் 2018 தொடர்களில் நுழைந்தது. ஐபிஎல் 2020-ன் போது ஸ்மித்தின் தாக்கம் சரிவர இல்லை என்று பேசப்பட்டது.

  மேலும் ஸ்மித்தும் தன் பேட்டிங் நிலைகளை மாற்றிக் கொண்டே இருந்தார். தொடக்கத்தில் இறங்கினார், பிறகு நடுவரிசையில் இறங்கினார்.

  கடந்த முறை 2018 ஏலத்தின் போது ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.12.5 கோடிக்கு ராயல்ஸ் தக்க வைத்தது. ஸ்மித்தை தற்போது ரிலீஸ் செய்தால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

  சையத் முஷ்டாக் அலி டிராபியில் கேரளா அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு மிகப்பெரிய கேப்டன் பொறுப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அளிக்க வாய்ப்புள்ளது.
  Published by:Muthukumar
  First published: