• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 | கொரோனா காலத்தில் குடும்பத்துடன் இருக்க வேண்டும்: ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் விலகல்

IPL 2021 | கொரோனா காலத்தில் குடும்பத்துடன் இருக்க வேண்டும்: ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் விலகல்

ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

கொரோனா வைரஸ் 2ம் அலை இந்தியா முழுதும் தலைவிரித்தாடி வருகிறது, இந்நிலையில் தன் குடும்பத்துடன் இருப்பதுதான் சரி என்று முடிவெடுத்த அஸ்வின் ஐபிஎல் 2021 தொடரிலிருந்து பாதியிலேயே விலகுவதாக அறிவித்துள்ளார்.

  • Share this:
    கொரோனா வைரஸ் 2ம் அலை இந்தியா முழுதும் தலைவிரித்தாடி வருகிறது, இந்நிலையில் தன் குடும்பத்துடன் இருப்பதுதான் சரி என்று முடிவெடுத்த அஸ்வின் ஐபிஎல் 2021 தொடரிலிருந்து பாதியிலேயே விலகுவதாக அறிவித்துள்ளார்.

    சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பிறகு அஸ்வின் தன் ட்விட்டர் பக்கத்தில், “நாளை முதல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறேன்”, என்று பதிவிட்டுள்ளார், அதாவது, “2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன் . நன்றி டெல்லி கேபிடல்ஸ்” எனத் தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகும் 4-வது வீரர் அஸ்வின். ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விலகினார், பயோ-பபுள் சூழலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் விலகினார், ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டையும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பையில் தொடங்கி சென்னை போட்டிகளை நேற்றுடன் முடித்துள்ளனர். திங்களனான இன்று அகமதாபாத் செல்கிறது டெல்லி அணி.

    டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும், ‘இந்த ஐபிஎல் தொடர் உள்ளே என்ன நடக்கிறது என்பதை விட வெளியே உள்ள நிலவரத்தைப் பற்றிய கவலை அதிகமான ஒரு தொடராக உள்ளடு’ என்று கூறியுள்ளார்.

    மேலும் 2 ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் ஊருக்குத் திரும்ப கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தியாவில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 3 லட்சத்தைக் கடந்து வருகிறது, என்னதான் பாதுகாப்புச் சூழலில் வீரர்கள் இருந்தாலும் பயமும் கவலையும் இருக்கத்தானே செய்யும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: