• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பணிச்சுமை காரணமாக ஐபிஎல் கேப்டன்சியை கோலியால் துறக்க முடியுமா?

பணிச்சுமை காரணமாக ஐபிஎல் கேப்டன்சியை கோலியால் துறக்க முடியுமா?

கோலி.

கோலி.

டி20 கேப்டன்சியிலிருந்து தன்னை உலகக்கோப்பைக்குப் பிறகு விடுவித்துக் கொள்வதாக அறிவித்துள்ள விராட் கோலி இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் முடிந்தால் என் கேப்டன்சியிலிருந்து நீக்கிப்பாருங்கள் என்று பிசிசிஐக்கு சூசகமாக சவால் விடுத்துள்ளார்.

  • Share this:
    பணிச்சுமையையும் தன் சொந்த பேட்டிங்கையும் காரணம் காட்டும் விராட் கோலி பதவியை விட்டு இறங்க வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், டி20-யிலேயே ஷெட்யூலிங் உட்பட அதிக போட்டிகள் விளையாடப்படுவது ஐபிஎல் தொடரில்தான் பணிச்சுமை என்றால் ஆர்சிபி கேப்டன்சியை கோலி உதற வேண்டியதுதானே என்ற கேள்வி எழுகிறது.

    2020 சீசனில் விராட் கோலி 12 டெஸ்ட்கள், 12 ஒருநாள்போட்டிகள், 15 டி20 சர்வதேச போட்டிகள், 22 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். அவ்வாறு 6 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ஆட்ட நாள் என்ற வீதத்தில் ஆடிஉள்ளார். 2010-ல் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தது முதல் மூன்றரை ஆண்டுகளில் 1024 நாட்கள் ஐபிஎல் அல்லது ஏதோ ஒரு கிரிக்கெட்டில் ஆடுகிறார் விராட் கோலி. பயணம், பயிற்சி, பிரஸ் மீட் என்று மூச்சு விடக்கூட நேரமில்லை.

    கோலியே இது தொடர்பாக முன்பு ஒருமுறை கூறும்போது, “8 ஆண்டுகளாக ஏற்க்குறைய ஆண்டுக்கு 300 நாட்கள் ஆடிவருகிறேன். இதில் பயிற்சி மற்றும் பயண நாட்களும் அடங்கும். ஒவ்வொரு முறையும் ஆட்டத்தில் தீவிரத்துக்கு குறைவில்லை ஆனால் இது நிச்சயம் நம் உடல்மீது தாக்கம் செலுத்தவே செய்யும்” என்றார் கோலி.

    தீவிர கேப்டன்சி பிரஷர், ஆட்ட நெருக்கடி, பயிற்சி, பிரயாணம் எல்லாம் ஐபிஎல் தொடரில்தான் அதிகம், சர்வதேச டி20-யில் அவ்வளவு பயணம் இருக்காது. அதுவும் கொரோனா பரவலுக்குப் பிறகு இந்தியா 8 சர்வதேச டி20 போட்டிகளில்தான் ஆடியுள்ளது. கேப்டன்சியினால்தான் விராட் கோலி 3 வடிவங்களிலும் ஆட வேண்டியுள்ளது. ஒருநாள் வடிவத்திலும் ரோகித் சர்மாவிடம் கோலி கேப்டன்சியை கொடுத்து விட்டால் அவர் போட்டிகளை, தொடர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    2023-ல் 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும்போது நிச்சயம் கோலி தன் கேப்டன்சியில் வெற்றி பெறவே விரும்புவார், அனைவருக்கும் உள்ள ஆசைதான். எனவே தான் டி20-யிலிருந்து மட்டும் அவர் கேப்டன்சியை விட்டுக்கொடுத்திருக்கிறார். உண்மையில் ஒருநாள் கேப்டன்சியிலிருந்து என்னை முடிந்தால் தூக்கிப்பாருங்கள் என்று பிசிசிஐக்கு சவால் விடுத்துள்ளதாகவே தெரிகிறது. ரோகித் சர்மா எப்படி வழிநடத்துகிறார் என்பதைப் பொறுத்து அணித்தேர்வுக்குழு உலகக்கோப்பை 2022 கிரிக்கெட் கேப்டன் யார் என்று முடிவு செய்யும்.

    டி20 கிரிக்கெட்டில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் ஸ்மார்ட் முடிவு தேவை, அந்தப் புத்தி கூர்மை, முடிவெடுக்கும் திறன், ஆட்டத்தின் போக்கைப் புரிந்து கொள்ளும் திறன் ஆகிவை மிக முக்கியம், கோலி இன்னும் ஐபிஎல் தொடரில் அந்த சங்கேதத்தை உடைக்கவில்லை. மாறாக தோனி அதை உடைத்து விட்டார், ரோகித் சர்மாவுக்கும் புரிந்து விட்டது. எனவேதான் கோலி ஐபிஎல் கேப்டன்சியை விடுவதுதான் அவருக்கு பணிச்சுமையையும் குறைக்கும், டெஸ்ட் கேப்டன்சியில் புதிய உச்சங்களை தொட முடியும் என்று உணரப்படுகிறது.

    ஆனால் ஐபிஎல் கேப்டன்சி விவகாரத்தில் பல கூறுகள் ஒன்றிணைந்து செயல்படுவதால் அதில் அத்தனை எளிதில் கேப்டன்சியை உதற முடியாது. வணிக நலன்கள் வர்த்தக ஷேம நலன்களெல்லாம் பார்க்க வேண்டியுள்ளதே!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: