விளையாட்டு

  • associate partner

ஸ்மித், சஞ்சு சாம்சன், டிவாட்டியா அதிரடி - 224 ரன்களைச் சேஸ் செய்து வென்ற ராஜஸ்தான்

ஸ்மித், சஞ்சு சாம்சன், டிவாட்டியா அதிரடி - 224 ரன்களைச் சேஸ் செய்து வென்ற ராஜஸ்தான்
சஞ்சு சாம்சன்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 11:36 PM IST
  • Share this:
பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஐக்கிய அரசு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐ.பி.எல் தொடர் நடைபெற்றுவருகிறது. இதுவரையில் 8 லீக் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளநிலையில், 9-வது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டிவன் ஸ்மித் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற பஞ்சாப் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களைக் குவித்தனர். அதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லரும், கேப்டன் ஸ்மித்தும் களமிறங்கினர். பட்லர் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ஸ்மித்துடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரது இணை, பஞ்சாப் அணியின் பந்து வீச்சைச் சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய ஸ்மித், 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர், சஞ்சு சாம்சனுடன், டிவாட்டியோ ஜோடி சேர்ந்தார். அவரும் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். சஞ்சு 42 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார்.


POINTS TABLE:
ORANGE CAP:

டிவாட்டியா 31 பந்துகளில் 53 ரன்களைக் குவித்தார். பின்னர், 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading