ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கே.எல்.ராகுல் விளாசல்... சென்னையை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

கே.எல்.ராகுல் விளாசல்... சென்னையை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் கே.எல்.ராகுலின் அதிரடியான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஐபிஎல் 2021 தொடரின் 53-வது லீக் போட்டியில் சிஎஸ்கே - பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக டூ-பிளெசிஸ் மற்றும் ருதுராஜ் களமிறங்கினார்கள்.

ருதுராஜ் 12 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த வந்த சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் ஓற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமலும் ராபின் உத்தப்பா 2 ரன் மற்றும் அம்பாதி ராயுடு 4 ரன்னிலும் அவுட்டாகினர்.

கேப்டன் மகேந்திர சிங் தோனி 15 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 12 ரன்களே மட்டுமே எடுத்து அவரும் அவுட்டாகி வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி 61 ரன்களில் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் தொடக்க வீரர் டூ-பிளெசிஸ் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி சார்பில் டூபிளெசிஸ் 55 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார். இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.

கேப்டன் கே.எல்.ராகுல் சிக்ஸரும், பவுண்டரிகளாக விளாசி அரைசதம் கடந்தார். மயங்க் அகர்வால் 12 ரன்னிலும், சர்ப்பராஜ் கான் ரன் ஏதுக்காமல் அவுட்டாகினர். அடுத்து வந்த ஷாருக் கான் 8 ரன்கள் மற்றும் எய்டன் மாக்ரம் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினர். மற்ற வீரர்கள் அதிரடி காட்ட தவறினாலும் கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்.

கே.எல்.ராகுலின் அதிரடியான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து எளிதாக இலக்கை எட்டியது. கே.எல்.ராகுல் 98 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.

First published:

Tags: IPL 2021