Home /News /sports /

தோனிக்கு கடைசி ஓவர் வீசிய ரிஷி தவான் முகத்தில் அணிந்திருந்தது என்ன? எதற்காக?

தோனிக்கு கடைசி ஓவர் வீசிய ரிஷி தவான் முகத்தில் அணிந்திருந்தது என்ன? எதற்காக?

ரிஷி தவான்

ரிஷி தவான்

பஞ்சாப் - சென்னை அணியின் போட்டியின் போது பஞ்சாப் வீரர் ரிஷி தவான் அணிந்திருந்த மாஸ்க் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் 38-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் ஷிகார் தவான் 88 ரன்கள் விளாசினார்.

    இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கிய சென்னை அணி 176 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதன்காரணமாக 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் தற்போது சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் ஆறு தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை அணி சார்பில் அம்பதி ராயுடு 39 பந்துகளில் 78 ரன்கள் விளாசியிருந்தார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் ரசிகர்கள் மட்டுமின்றி பலரது கவனத்தையும் ஈர்த்த விஷயமாக ரிஷி தவான் அணிந்திருந்த ஃபேஷ் ஷில்ட பார்க்கப்பட்டது. ஏனெனில் பொதுவாக கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் மற்றும் அம்பயர்கள் என ஒருசிலரே பந்து எளிதாக தங்களைத் தாக்கி விடும் என்று இதுபோன்று அணிவது வழக்கம். ஆனால் பவுலர் ஒருவர் இதுப்போன்று ஃபேஷ் ஷீல்ட் அணிந்திருந்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

    Also Read : ஏன் மின்வெட்டு? ஏன் நெருக்கடி?- ஜார்கண்ட் அரசிடம் கேள்வி எழுப்பிய சாக்‌ஷி தோனி

    ரஞ்சி தொடரில் இமாச்சல பிரதேச அணிக்காக தலைமை தாங்கி விளையாடி வரும் ரிஷி தவான் நடைபெற்று முடிந்த ரஞ்சி கோப்பையில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பந்துவீசுகையில் பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரது முகத்தில் பலமாக தாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு மூக்கு பகுதியில் எலும்பு முடிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. இனிமேலும் அதுபோன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது என்றும் அந்த காயம் மீண்டும் பெரிதாக கூடாது என்பதற்காகவும் இவ்வகையான ஃபேஸ் ஷீல்டை அவர் ஒரு முன்னெச்சரிக்கையாக அணிந்து விளையாடி உள்ளார்.

    கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட துவங்கிய ரிஷி தவான் 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்த ஒரு அணியிலும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். ரஞ்சி கோப்பையில் அவரது அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல் முக்கிய வீரராக இருந்தார். இதனால் பஞ்சாப் அணி அவரை ரூ.55 லட்சத்திற்கு அவரை வாங்கியது. சென்னை அணிக்கு எதிராக கடைசி ஓவரை ரிஷி தவான் வீசினார். தோனிக்கு எதிராக ரிஷி தவான் வீசி விக்கெட்டையும் வீழ்த்தி அணிக்கு வெற்றி பெற செய்தார் என்பது குறிப்பிடதக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி