• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆயிரம் சிக்ஸர்கள் அடித்த வீரருக்கு பதிலாக 43 சிக்ஸர்கள் அடித்த வீரருக்கு வாய்ப்பளித்த பஞ்சாப்

ஆயிரம் சிக்ஸர்கள் அடித்த வீரருக்கு பதிலாக 43 சிக்ஸர்கள் அடித்த வீரருக்கு வாய்ப்பளித்த பஞ்சாப்

கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்

IPL 2021 | Punjab Kings | நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 5 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021-ன் இரண்டாம் கட்டத்தின் முதல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மூத்த பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லை களமிறக்கவில்லை. அவருக்கு பதிலாக ஐடன் மார்க்ராம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற பஞ்சாப், ராஜஸ்தானுக்கு எதிராக பந்து வீச முடிவு செய்தது.

    ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டத்தின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கிறிஸ் கெய்லை களமிறக்கவில்லை. கெய்ல் (கிறிஸ் கெய்ல்) டி 20 யில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர். இன்று அவர் தனது 42 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஐடன் மார்க்ராமுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. டி 20 போட்டியில் மார்க்ரம் 43 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார். இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல் பந்துவீச முடிவு செய்தார்.

    வெஸ்ட் இண்டீஸின் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலின் ஒட்டுமொத்த டி 20 போட்டிகளை பார்க்யைில், அவர் 446 போட்டிகளில் 37 சராசரியில் 14261 ரன்கள் எடுத்துள்ளார். 22 சதங்கள் மற்றும் 87 அரை சதங்கள் அடித்துள்ளார். அவர் 1104 பவுண்டரிகள் மற்றும் 1042 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதே நேரத்தில், தென்னாப்பிரிக்காவின் ஏடன் மார்க்ராம் 59 டி 20 போட்டிகளில் 31 சராசரியில் 1424 ரன்கள் எடுத்துள்ளார். 12 அரைசதங்கள் அடித்துள்ளார். அவர் 43 சிக்ஸர்களை மட்டுமே அடித்துள்ளார். அதாவது கெய்லை விட 999 சிக்ஸர்கள் குறைவு. மார்க்ராம் ஐபிஎல்லில் அறிமுகமாகிறார்.

    MOST SIXES:

    நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 5 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் 6-வது இடத்தில் உள்ளது.

    RESULT DATA:

    இரு அணிகளிலும் விளையாடும் 11 வீரர்கள்

    பஞ்சாப் கிங்ஸ்: கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ராம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், அடில் ரஷித், இஷான் போரல், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.

    ராஜஸ்தான் ராயல்ஸ் : எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், லியாம் லிவிங்ஸ்டன், ரியான் பராக், மஹிபால் லோமோர், ராகுல் திவாடியா, கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா மற்றும் கார்த்திக் தியாகி.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: