விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் போட்டிகளை தியேட்டரில் ஒளிபரப்பும் திட்டம் இல்லை - தனியார் தொலைக்காட்சி விளக்கம்

கொரோனோ கால ஐ.பி.எல் போட்டியை திரையரங்குகளில் ஒளிபரப்ப திட்டம் இல்லை என தனியார் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளை தியேட்டரில் ஒளிபரப்பும் திட்டம் இல்லை - தனியார் தொலைக்காட்சி விளக்கம்
ஐ.பி.எல்
  • News18
  • Last Updated: September 17, 2020, 11:08 PM IST
  • Share this:
கொரோனா கால ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19 ம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது.
ரசிகர்கள் இல்லாமல், உள்ளூர் மைதானம், எதிரணி மைதானம் என எதிர்பார்ப்புகள் இல்லாமல் அரங்கேறும் முதல் ஐ.பி.எல் தொடர்.

ரசிகர்கள் தங்கள் விரும்பும் அணிக்கு இல்லத்தில் இருந்தபடி அல்லது இணையதளத்தில் மட்டுமே தங்கள் ஆதரவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த முடியும்.


இந்த சூழ்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை திரையரங்குகளில் ஒளிபரப்ப விருப்பம் தெரிவித்தனர். கொரோனோ கால வருமான இழப்பை இதன் மூலம் ஈடுகட்ட முடிவு செய்து திரையரங்குகளை திறக்க அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.

ஐ.பி எல் போட்டியை திரையரங்குகளில் ஒளிபரப்புவது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு ரசிகர்களிடம் கருத்து கேட்டது. ஒரு சிலர் தியேட்டரில் நடைபெறுவது போட்டியை வேறுவிதமாக ரசிக்க வைக்கும் என தெரிவித்தனர். ஆனால் பெரும்பாலானோர் இந்த முயற்சி ஆபத்தை உண்டாக்குவிடும் எனவும், இதற்கு வரவேற்பு இருக்காது எனவும் தெரிவித்தனர்.

இதற்கு முன் 2007, 11 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தியேட்டரில் ஒளிபரப்பு செய்து அனுபவம் பெற்ற தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் இம்முறை அதை நடைமுறைபடுத்துவது என்றால் ஐ.பி.எல் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை வைத்துள்ள தனியார் தொலைக்காட்சியின் அனுமதி பெறுவது கட்டாயம்.Also read... 2020 - 21 கல்வியாண்டை ரத்து செய்ய முடியாது - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

அவர்களிடம் நாம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்டு கேட்ட போது தியேட்டரில் ஒளிபரப்பு செய்யும் திட்டம் இல்லை என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

கொரோனோ கால ஐ.பி.எல் தொடர் ரசிகர்களை ஒன்றிணைக்காமல் அவர் அவர் இருக்கும் இடத்தில் சுவாரஷ்யங்களையும் கொண்டாட்டங்களையும் கொட்டும் வித்தியாசமான நவீனகால தொழில்நுட்ப ஐ.பி.எல். விளையாட்டாக வரலாற்றில் இடம்பிடிக்க காத்திருக்கிறது.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading