• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல்-ல் பல ஜாம்பவான்களையே சாத்தியுள்ளனர், இந்த இலங்கை பவுலிங் எம்மாத்திரம்? : பிரிதிவி ஷா, இஷான் கிஷன் அதிரடி குறித்து முரளிதரன்

ஐபிஎல்-ல் பல ஜாம்பவான்களையே சாத்தியுள்ளனர், இந்த இலங்கை பவுலிங் எம்மாத்திரம்? : பிரிதிவி ஷா, இஷான் கிஷன் அதிரடி குறித்து முரளிதரன்

 முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 80 பந்துகள் மிச்சம் வைத்து இந்திய அணி 36.3 ஓவர்களில் வென்றதற்கு பிரிதிவி ஷா, இஷான் கிஷனின் அச்சமற்ற ஆட்டம் காரணம், ஆனால் இலங்கை பவுலிங்கும் மிகச் சாதாரணமாக சராசரிக்கும் கீழ் இருந்தது என்று முன்னாள் இலங்கை ஸ்பின் மேதை முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

  • Share this:
    பிரிதிவி ஷா 24 பந்துகளில் 44 ரன்களை விளாச இஷான் இஷன் 33 பந்துகளில் 59 ரன்களை எடுக்க 18வது ஓவர் முடிவதற்குள்ளேயே இந்திய அணி 143 ரன்களை எடுத்து விட்டது. மீதியெல்லாம் தட்டித் தட்டி எடுக்கப்பட்ட ரன்கள்தான். பிரித்வி ஷா இன்னிங்ஸ் ஆட்டத்தை இலங்கையிடமிருந்து பறித்து விட்டது.

    ஈஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிற்கு முரளிதரன் அளித்த பேட்டி வருமாறு:

    இலங்கை அணியிடம் உத்வேகம் இருந்தது, 210-220 தான் எடுப்பார்கள் என்ற நிலையிலிருந்து 262 ரன்கள் எடுத்தனர், இந்த பிட்சில் இது கொஞ்சம் நல்ல ரன்கள்தான். தொடக்கத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தால் ஆட்டம் சவாலாக இருந்திருக்கும், குறிப்பாக ஷிகர் தவான் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்றேன், ஏன் எனில் அவர்தான் நின்று கடைசி வரை ஆடக் கூடியவர், அவர் நின்றால் மற்றவர்கள் விரைவு கதியில் ரன்கள் எடுப்பார்கள் என்பது தெரிந்ததே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிரித்வி ஷா அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடக் கூடியவர். முதல் ஓவரில் அவரை எடுக்க வேண்டும் இல்லையெனில் அவர் என்ன செய்வார் என்பதைத்தான் இப்போது காட்டி உள்ளார். இஷான் கிஷன் அவர் போலவே தொடர்ந்து ஆடினார் 10 ஒவர்களில் 90 ரன்கள் என்பது அசாத்திய தொடக்கம், இந்தியா இத்தகைய தொடக்கத்தைத்தான் விரும்பியது. இலங்கை அணி விக்கெட்டுகள் எடுப்பது போலவே வீசவில்லை. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் ஆட்டத்தை 50வது ஓவர் வரை கொண்டு செல்ல முடியும். பிரித்வி ஷா ஆட்டத்தை தட்டிப் பறித்தார் இஷான் கிஷனும் அதே பாணியில் தொடர்ந்தார்.

    இலங்கை அணியின் பந்து வீச்சு மிக மிக சாதாரணமாக சராசரிக்கும் கீழ் இருந்தது.

    எல்லா காலத்திலும் அட்டாக்கிங் பேட்ஸ்மென்கள் இருந்திருக்கிறார்கள் இலங்கையில் இருந்திருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவில் கில்கிறிஸ்ட் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள், பாண்டிங் போட்டு சாத்துவார், இலங்கையில் ஜெயசூரியா, கலுவிதரனா, இந்தியாவில் சேவாக், சச்சின் அந்த வகையில் இந்த வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் ஸ்பின்னர்களை அவர்கள் ஆடியிருக்கிறார்கள். எனவே இந்த இலங்கை பந்து வீச்சை அவர்கள் அவ்வளவு சீரியசாக எடுத்திருக்க மாட்டார்கள். அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவ்வாறு கூறினார் முத்தையா முரளிதரன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: