ஐபிஎல் 2021 : புள்ளிப்பட்டியலில் டாப் அணி எது? ப்ர்ப்பிள் கேப், ஆரஞ்ச் கேப்பை வசப்படுத்திய வீரர்கள் யார்?

ஐபிஎல் 2021

ஐபிஎல் 2021 தொடரில் இதுவரை ராஜஸ்தான் - சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி வரை 12 லீக் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது.

 • Share this:
  ஐபிஎல் 2021 தொடர் சென்னை மற்றும் மும்பையில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 12 லீக் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. அதன்படி பெங்களூரு அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே , டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியனஸ் அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படை முறையே 2, 3 மற்றும் 4-வது இடங்களை பெற்றுள்ளது.

  இதற்கு அடுத்தப்படியாக 2 புள்ளிகளுடன் கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் முறையே 5,6 மற்றும் 7-வது இடத்தை பெற்றுள்ளன. ஹைதராபாத் அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது. 8 அணிகளும் தற்போது வரை தலா 3 போட்டிகளில் விளையாடி உள்ளது.

  ஆரஞ்ச் கேப் - அதிக ரன்கள்

  ஐபிஎல் 2021 தொடரில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்ச் கேப்பை டெல்லி அணி வீரர் ஷிகார் தவான் தக்கவைத்து கொண்டுள்ளார். தவான் 3 போட்டிகளில் களமிறங்கி 186 ரன்கள் அடித்துள்ளார். ஆர்.சி.பி வீரர் மேக்ஸ்வெல் 176 ரன்களுடன் 2-வது இடத்திலும், பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் 157 ரன்கள் உடன் 3-வது இடத்திலும் உள்ளார்.

  பர்ப்பிள் கேப் - அதிக விக்கெட்கள்

  ஐபிஎல் 2021 தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி ஆர்.சி.பி பவுலர் அர்ஷல் பட்டேல் முதலிடத்தில் உள்ளார். ஹர்சல் பட்டேல் 9 விக்கெட்களுடன் முதலிடத்திலும், மும்பை இந்தியன்ஸ் பவுலர் ராகுல் சஹார் 7 விக்கெட்கள் உடன் 2-வது இடத்திலும் உள்ளார்.

  ஐபிஎல் 2021 புள்ளிப்பட்டியல்


  ஐபிஎல் 2021 அதிக விக்கெட்


  ஐபிஎல் 2021 அதிக ரன்கள்


  இதனிடையே ஐபிஎல் 2021 தொடரின் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோத உள்ளன.
  Published by:Vijay R
  First published: