ஐபிஎல் 2022 கோலாகலப் பண
மழை கிரிக்கெட் திருவிழா அகமதாபாத்தில் நேற்று ஹர்திக் பாண்டியா தலைமை குஜராத் டைட்டன்ஸின் டைட்டில் வெற்றியில் முடிந்தது. இதில் எமர்ஜிங் பிளேயர் விருதை வென்றார் காஷ்மீரின் சன் ரைசர்ஸ் வேகப்
புயல் உம்ரன் மாலிக்.
உம்ரன் மாலிக் இல்லை என்பதால் அந்த விருதை முகமது ஷமி சேகரித்துக் கொண்டார். ஆனால் அவர் இந்த விருது பெற்றது குறித்து ரெக்கார்டட் மெசேஜில், “எனக்கு மிக்க மகிழ்ச்சி. தயவு செய்து எனக்கு தொடர்ந்து ஆதரவளியுங்கள், இது போன்ற ஆட்டங்களை நான் உங்களுக்காக மேலும் தருவேன்” என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் 2022 தொடரில் 27 விக்கெட்டுகளுடன் பர்ப்பிள் தொப்பியை வென்றார் ராஜஸ்தான் அணியின் செஹல். இலங்கையின் ஆர்சிபி பவுலர் வனிந்து ஹசரங்கா 26 விக்கெட்டுகளுடன் 2ம் இடம். 23 விக்கெட்டுகளுடன் ரபாடா 3ம் இடத்திலும் 22 விக்கெட்டுகளுடன் உம்ரன் மாலிக் 4ம் இடத்திலும் உள்ளார்.
இதில் ஒரு முறை 4 விக்கெட்டும், ஒருமுறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார் உம்ரன் மாலிக். கடைசியாக இவரிடம் அடி வாங்கியது மயங்க் அகர்வால். வின்னிங் கேப்டன் ஹர்திக் பாண்டியா வாங்கினார், ரோஹித் சர்மா வாங்கினார், இஷான் கிஷன் வாங்கினார், மேட் வேட் வாங்கினார், இப்படி முக்கியமான பேட்டர்கள் யாரும் இவரை ஒழுங்காக ஆடவில்லை, கே.எல். ராகுலும் வாங்கினார்.
இவர் டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்தால்தான் சரியாக இருக்கும், நேரடியாக அவரை இந்திய டெஸ்ட் அணியில் எடுங்கள் என்று ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.
ஆனால் டி20 அணியில்தான் இருக்கிறாரே தவிர இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை, இன்னொரு இளம் திறமை பிரசித் கிருஷ்ணா இங்கிலாந்து தொடரில் இருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.