• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • PBKS vs RR IPL 2021: 2 ஓவர் 8 ரன்கள், 8 விக்கெட் கையில், தோற்க முடியுமா?- அதுதான் பஞ்சாப்- பிளே ஆஃப் கதவு அடைப்பு

PBKS vs RR IPL 2021: 2 ஓவர் 8 ரன்கள், 8 விக்கெட் கையில், தோற்க முடியுமா?- அதுதான் பஞ்சாப்- பிளே ஆஃப் கதவு அடைப்பு

த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்.

த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்.

நேற்று துபாயில் நடந்த ஐபிஎல் 2021 தொடரின் 32வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது என்றால் காரணம் பஞ்சாப் கிங்ஸ் அணியினால் த்ரில்லாக தோற்க முடியும் என்பதாலேயே.

  • Share this:
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே 17 ஓவர்களில் 169/5 என்ற நிலையில் முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் அட்டகாசப் பந்து வீச்சில் 183 ரன்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது, இல்லையெனில் லோம்ரோர் அடித்த அடிக்கு ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டியிருக்க வேண்டும், எப்படியோ கட்டுப்படுத்தி 183 ரன்கள் எனும்போது பஞ்சாப் நிச்சயம் ராகுல், மயங்க் அகர்வால், மார்க்ரம் மூலம் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அப்படியும் தோற்க முடியும் என்றால் அது பஞ்சாபால்தான் முடியும்.

    இத்தனைக்கும் ராஜஸ்தானின் கிரவுண்ட் பீல்டிங் நன்றாக இருந்தாலும் ராகுலுக்கு மட்டும் ஆரம்பத்திலேயே 3 கேட்ச்களை தவற விட்டனர். இதனையடுத்து கடைசி 2 ஓவர்களில் 8 ரன்கள் தேவை என்று நினைத்தாலும் தோற்க முடியாது என்ற நிலையே. அதுவும் 8 விக்கெட்டுகள் கையில் உள்ளன. நிகோலஸ் பூரன், அய்டன் மார்க்ரம் 28 பந்துகளில் அரைசதக் கூட்டணி அமைத்திருந்தனர். பஞ்சாப் வெற்றி உறுதி என்ற நிலை.

    முஸ்தபிசுர் ரஹ்மானை அவ்வளவு எளிதில் அடித்து விடமுடியாது, இடது கை வேகப்பந்து கோணத்தில் அவர் கட் ஸ்விங் செய்வார் பிட்சில் பந்து கிரிப் ஆகி வரும்போது ஆடுவது கடினம். பஞ்சாபுக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலையில் வைடு யார்க்கர்களை பல்வேறு கோணத்திலிருந்து வீசினார். முதல் 2 பந்துகள் மாட்டவில்லை கடைசி 4 பந்துகளில் 4 ரன்கள்தான் வந்தது, மாஸ்டர்ஃபுல் ஓவர். முதல் 3 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்த முஸ்தபிசுர் கடைசி ஓவரில் 4 ரன்கள்தான் கொடுத்தார். அதுவும் மார்க்ரமுக்கு ஒரு கேட்சும் விடப்பட்டது. கேட்ச் விடப்பட்டாலும் பவுண்டரி போக வேண்டிய பந்தை சக்காரியா தடுக்க 3 ரன்கள் சேவ்.

    எனவே 19வது ஓவர் முடிவில் 182/2. 20வது ஓவரை அடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி வீச வந்தார். தேவை 4 ரன்களே. முதல் பந்து ஃபுல்டாஸ் நேராக கையில் அடித்தார் மார்க்ரம். அடுத்த பந்தும் சரியாக சிக்காமல் 1 ரன் தான் வந்தது. அடுத்த பந்தை பூரன் தேர்ட்மேனில் திருப்பி விட நினைத்து சாம்சனிடம் கேட்ச் ஆனார். பஞ்சாப் அணிக்குத் தேவை 3 பந்துகளில் 3 ரன்கள். ஹூடா பேட்டிங் முனைக்கு வந்தார், வைடாக வீச நோ ரன். அடுத்த ஆஃப் ஸ்டம்ப் பந்தை ஹூடா எட்ஜ் செய்ய சாம்சனிடம் கேட்ச் ஆனது. புது வீரர் ஃபேபியன் ஆலன் 6வது பந்தை எதிர்கொண்டார். ஃபுல், வைடு பந்து ஆலனால் கனெக்ட் செய்ய முடியவில்லை.

    கார்த்திக் தியாகி கொண்டாட்டம்


    Also Read: PBKS vs RR | யாராலும் நம்ப முடியாத வெற்றி... கடைசி ஓவரில் ட்விஸ்ட் கொடுத்த கார்த்திக் தியாகி

    அசாத்தியத்தை நிகழ்த்தினார் கார்த்திக் தியாகி. 182 ரன்களில் முடிந்தது பஞ்சாப், எப்படி தோற்க முடியும் என்று கேட்டால் அது பஞ்சாபுக்கே வெளிச்சம். உறுதியான வெற்றி நிலையிலிருந்து தோற்க முடிகிறதென்றால் அது பஞ்சாப் ஆகத்தான் இருக்க முடியும் கிங்ஸ் ஆக இருக்க முடியாது. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க சதக்கூட்டணி, அர்ஷ்தீப் சிங் முகமது ஷமியின் அட்டகாச பவுலிங் ராஜஸ்தான் விட்ட 4-5 கேட்ச்கள் எல்லாம் வீண். இப்போது கிங்ஸ் பஞ்சாப் வரும் அனைத்துப் போட்டிகளையும் வென்றால்தான் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: