ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

PBKS vs RR IPl 2021: பஞ்சாப்-ராஜஸ்தான் நேருக்கு நேர் ரெக்கார்ட், ஐபிஎல் 2021- முழு விவரம்

PBKS vs RR IPl 2021: பஞ்சாப்-ராஜஸ்தான் நேருக்கு நேர் ரெக்கார்ட், ஐபிஎல் 2021- முழு விவரம்

இன்று பஞ்சாப்-ராஜஸ்தான் மோதல்

இன்று பஞ்சாப்-ராஜஸ்தான் மோதல்

இன்று துபாயில் நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 32வது ஐபிஎல் போட்டியின் புள்ளி விவரங்கள், நேருக்கு நேர் மோதலில் வெற்றி விவரம் ஆகியவை இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன.

 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :

  ஐபிஎல் 2021 புள்ளிகள் அட்டவணையில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 போட்டிகளில் 3 வெற்றி தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது நெட் ரன் ரேட் -0.190. பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதே 6 புள்ளிகள்தான் பெற்றுள்ளது ஆனால் 8 போட்டிகளில் ஆடியுள்ளது. 3 வெற்றி, 5 தோல்வி. பஞ்சாப் அணி 7ம் இடத்தில் உள்ளது. எனவே இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

  கடந்த 13 ஐபிஎல் தொடர்களில் இரு அணிகளும் சில த்ரில் போட்டிகளை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளன. இதுவரை இரு அணிகளும் 22 முறை மோதியுள்ளன. பஞ்சாப் 10 முறைதான் வென்றுள்ளது, ராஜஸ்தான் 12 முறை வென்று முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் கடந்த முறை மோதிய போட்டி ஹை ஸ்கோரிங் போட்டியாகும். பஞ்சாப் அணி 221 ரன்கள் குவித்தது, வெறும் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. கே.எல்.ராகுல் 50 பந்துகளில் 97 ரன்களை மைதானம் முழுக்க சிதறடித்தார்.

  ஆனால் சேசிங்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்களை விளாசி தெறிக்கவிட்டார். வான்கடே ஸ்டேடியத்தில் அன்று பல தீபங்களை ஏற்றினார் சஞ்சு சாம்சன். ஆனால் 4 ரன்களில் ராஜஸ்தான் துரதிர்ஷ்டவசமாக தோல்வி தழுவியது. ராஜஸ்தான் அணியில் அதிரடி வீரர்கள் பலர் உள்ளனர். லிவிங்ஸ்டன், எவின் லூயிஸ், சாம்சன், டேவிட் மில்லர் ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ் என்று அதிரடிக்குப் பஞ்சமில்லை.

  பஞ்சாப் கிங்ஸ் அணியில் ராகுல், மயங்க் அகர்வால், யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன், ஷாரூக் கான், ஆகிய அதிரடி வீரர்கள் உள்ளனர். பவுலிங்கில் எடுத்துக் கொண்டால் ராஜஸ்தான் அணியில் கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சக்காரியா, முஸ்தபிசுர், ராகுல் திவேத்தியா உள்ளனர், கிங்ஸ் அணியில் மொகமத் ஷமி, அர்ஷ்தீப் சிங் மிக அருமையான பவுலர், ஜோர்டான், பிஷ்னாய் போன்றோர் உள்ளனர் எனவே போட்டி த்ரில்லுக்குப் பஞ்சமிருக்காது, குறிப்பாக கடைசி போட்டி வான்கடேயில் நடந்த போது 221, 217 ஸ்கோர் செம த்ரில் மேட்ச்.

  ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2021, Kl rahul, Sanju Samson