• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • PBKS vs RR IPL 2021:இளம் வயதில் இவ்வளவு திறமையா?- ஆச்சரியமூட்டும் அர்ஷ்தீப் சிங்

PBKS vs RR IPL 2021:இளம் வயதில் இவ்வளவு திறமையா?- ஆச்சரியமூட்டும் அர்ஷ்தீப் சிங்

அர்ஷ்தீப் சிங்

அர்ஷ்தீப் சிங்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் கடைசியில் ராஜஸ்தான் அணியை கட்டுப்படுத்தி பஞ்சாபுக்கு ஹோப் கொடுத்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இளம் வயதில் 5 விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

  • Share this:
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் கடைசியில் ராஜஸ்தான் அணியை கட்டுப்படுத்தி பஞ்சாபுக்கு ஹோப் கொடுத்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இளம் வயதில் 5 விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    அதிரடி வீரர்களான எவின் லூயிஸ், லியாம் லிவிங்ஸ்டன், மகிபால் லோம்ரோர், சேத்தன் சகாரியா, கார்த்திக் தியாகி ஆகியோர் விக்கெட்டுகளை சரமாரியாக வீழ்த்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அர்ஷ்தீப் சிங். இதன் மூலம் 4 ஓவர் 32 ரன்கள் 5 விக்கெட்டுகள் என்று அவரது பவுலிங் அனாலிசிஸ் ஆரோக்கியமாக இருப்பதோடு ஐபிஎல் 2021 தொடரில் 12 விக்கெட்டுகளுடன் பர்ப்பில் தொப்பியை நோக்கி முன்னேறி வருகிறார்.

    ஐபிஎல் தொடரில் அவர் நேற்று 5 விக்கெட்டுகளை வீழ்த்திய போது அவரது வயது 22 வருடம் 228 நாட்களே. இவருக்கு முன்பாக ஜெயதவே உனாட்கட் 21 வயதில் 5 விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் வீழ்த்தியுள்ளார். இது 2013 ஐபிஎல் தொடரில் என்பது குறிப்பிடத்தக்கது, மற்றொரு வீரர் அல்ஜாரி ஜோசப் 2019-ல் 22 வயது 168 நாட்களில் 5 விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் கைப்பற்றியுள்ளார், ஆகவே அர்ஷ்தீப் சிங் 3வது இளம் வீரர் ஆவார்.

    ஐபிஎல் தொடரில் அர்ஷ்தீப் சிங்கின் 5 விக்கெட் பந்து வீச்சு இதுவரை இந்தியாவுக்கு ஆடாத வீரர் வரிசையில் 4வது சிறந்த பந்துவீச்சாகும். இவருக்கு முன்பாக அன்கிட் ராஜ்புத் 14 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். வருண் சக்ரவர்த்தி 5/20. ஹர்ஷல் படேல் 5/27. ராஜஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது யார் தெரியுமா இப்போது பஞ்சாப் கோச் ஆக இருக்கிறாரே அந்த அனில் கும்ப்ளேதான் 2009-ல் ராஜஸ்தானுக்கு எதிராக 5/5 என்று கலக்கியுள்ளார் அனில் கும்ப்ளே.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: