• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • PBKS vs MI | மும்பை ஜெயிப்பதற்காக பாடுபட்டு ஆடிய பஞ்சாப்: ‘உஷ் கண்டுக்காதீங்க’ தருணங்கள்

PBKS vs MI | மும்பை ஜெயிப்பதற்காக பாடுபட்டு ஆடிய பஞ்சாப்: ‘உஷ் கண்டுக்காதீங்க’ தருணங்கள்

பொலார்டு பாண்டியா, போட்டுக்கொடுத்த ஷமி.

பொலார்டு பாண்டியா, போட்டுக்கொடுத்த ஷமி.

அபுதாபியில் செவ்வாயன்று நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் 42வது போட்டியில் வெற்றி பெற வாய்ப்பிருந்தும் பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே பஞ்சாப் கிங்ஸ் எடுத்த சில முடிவுகள் மும்பையை வெற்றி பெறச் செய்வதற்குத்தானோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஐபிஎல் தொடர்களில் உஷ் கண்டுக்காதீங்க என்று சொல்லக்கூடிய தருணங்கள் எந்தத் தொடரிலும் உண்டு.

  • Share this:
    அபுதாபியில் செவ்வாயன்று நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் 42வது போட்டியில் வெற்றி பெற வாய்ப்பிருந்தும் பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே பஞ்சாப் கிங்ஸ் எடுத்த சில முடிவுகள் மும்பையை வெற்றி பெறச் செய்வதற்குத்தானோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஐபிஎல் தொடர்களில் உஷ் கண்டுக்காதீங்க என்று சொல்லக்கூடிய தருணங்கள் எந்தத் தொடரிலும் உண்டு.

    வெறும் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் எப்போதும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் மற்ற 2 இடங்களுக்குத்தான் 6 அணிகள் போட்டியிடுகின்றன என்றால் மற்ற அணிகள் என்ன இந்த இரு அணிகளுக்கும் ஒப்புக்குச் சப்பாணியா என்ற கேள்வி எழுகிறது, இதில் கூடுதலாக இரண்டு ஒப்புக்குச் சப்பாணி அணிகள் வேறு வரவிருக்கிறதாம் இது எப்படி இருக்கு?

    பஞ்சாப் கிங்ஸ் அணி 135/6, மும்பை இண்டியன்ஸ் 137/4 என்று 19வது ஓவரிலேயே முடிந்து விட்டது, முகமது ஷமியின் ஷார்ட் பிட்ச் பவுலிங் வேண்டுமென்றே போட்டுக்கொடுப்பு பவுலிங் போலவேதான் தெரிந்தது. முதலில் பேட்டிங்கில் கிங்ஸ் பஞ்சாப் கடைசி 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அடிக்க முயற்சி செய்யவில்லை. இது ஒரு புறம்.

    மாறாக டெத் ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலர்கள் 17,18, 19-வது ஓவர்களில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விட்டுக் கொடுக்கின்றனர், 20வது ஓவருக்கு வேலையே இல்லாமல் செய்து விட்டார் ஷமி. அர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் ஹர்திக் பாண்டியாவுக்கு கேட்சைப் பிடிப்பதற்குப் பதிலாக பவுண்டரியில் ஹர்தீப் பிரார் பந்தை தள்ளி விடுகிறார்!!

    கிறிஸ் கெய்லை அணியில் எடுப்பதிலும் இந்த கணக்கீடுகள் இருப்பதால்தான் அவரை எடுப்பதும் விடுவதுமாக உள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெய்ல் போன்ற ஒரு ஸ்டார் பிளேயர் 31வது போட்டியில் முதலில் ஆடுகிறார் இது என்ன கணக்கு? அந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சா 1 போட்டியில்தான் அதுவரை வென்றிருந்தது.

    நேற்றைய ஆட்டத்தில் மாயங்க் அகர்வால் கழுத்து வலியினால் ஆட முடியாது போக எங்கிருந்தோ மந்தீப் சிங் என்ற பிளேயரை தொடக்கத்தில் இறக்கியது பஞ்சாப் இது ஏன்? கெய்லைத்தானே இறக்கியிருக்க வேண்டும்? கெய்லை இறக்கியிருந்தால் பவர் ப்ளேயில் குருணால் பாண்டியாவுக்கு கொடுத்திருப்பாரா ரோகித் சர்மா? சரி ராகுலாவது குருணால் பாண்டியாவை சாத்தியிருக்க வேண்டாமா? அவரும், மந்தீப் சிங்கும் குருணாலை அச்சுறுத்தாமல் விட்டு விட்டனர், அவர் 3 ஓவர் 16 ரன்கள் என்று எஸ்கேப் ஆகவிடப்பட்டார்.

    பிறகு கடைசியில் பாண்டியாவுக்கு விடப்பட்ட கேட்ச், ஷமியின் அந்த 19வது ஓவர். யார்க்கர், ஸ்லோயர் ஒன் என்று போடுவதற்குப் பதிலாக ஷமி பவுலிங் என்ற பெயரில் தன் காலுக்குக் கீழேயே பந்தை பிட்ச் செய்து தேங்காய் உடைத்தது ஏன் என்ற கேள்வியும் சந்தேகமும் எழுகிறது. கடைசி ஓவரில் 4 ரன்களை ஒரு அணி தடுத்து வெற்றி பெற முடிகிறது எனும்போது 16 ரன்களை ஷமி விட்டுக் கொடுக்கிறார், அன்று அதுவரை நன்றாக வீசிய கொல்கத்தாவின் பிரசித் கிருஷ்ணா கடைசியில் ஜடேஜாவுக்கு சொத்தையாக வீசி 2 பவுண்டரி 2 சிக்சர்களைக் கொடுக்கிறார். இதெல்லாம் என்ன? மேட்சைப் பார்ப்பவர்களை கோமாளியாக்குவது போல் தெரிகிறதே?

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: