ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்பை ஏலம் கேட்க எந்த இந்திய நிறுவனங்களும் முன்வரவில்லையென்றால் மட்டும், பதஞ்சலி டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்பை வாங்குவதற்கான முயற்சியில் இறங்கும் என்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
பதஞ்சலி நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்புக்கு ஏற்கனவே விண்ணப்பித்து வாங்கி விட்டது என வெளியாகி வரும் செய்திகளை மறுத்துப் பேசியிருக்கும் அவர், “பதஞ்சலி, ஐபிஎல் டைட்டிலுக்கான எந்த விதமான ஆவணங்களையும், விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்கவில்லை. இந்தியச் சந்தையை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிக்க நாங்கள் விடமாட்டோம். ஒருவேளை டைட்டிலுக்கு வேறு எந்த இந்திய நிறுவனங்களும் முன்வராத சூழ்நிலை வந்தால் மட்டுமே பதஞ்சலி டைட்டிலுக்கு விண்ணப்பிக்கும்" என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ, ஸ்பான்சர்ஷிப் டைட்டில்களுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஸ்பான்சர்ஷிப்புகளுக்கு ஆகஸ்ட் 18 தான் விண்ணபிக்க கடைசி தேதி என அதிகாரப்பூர்வ ஐபிஎல் டி-20 வலைதளம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baba Ramdev, BCCI, IPL 2020, Patanjali, VIVO