Home /News /sports /

மறக்க முடியுமா? ஜூன் 1, 2008- தோனி படைக்கு அதிர்ச்சியளித்த ஷேன் வார்ன் படை- சிஎஸ்கே கோப்பை கனவு தகர்ந்த கதை

மறக்க முடியுமா? ஜூன் 1, 2008- தோனி படைக்கு அதிர்ச்சியளித்த ஷேன் வார்ன் படை- சிஎஸ்கே கோப்பை கனவு தகர்ந்த கதை

2008 ஐபிஎல் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ்.

2008 ஐபிஎல் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஆயிரம் ஐபிஎல் தொடர்கள் நடந்தாலும் 2008ம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரின் போட்டிகளும் அதன் விறுவிறுப்பும் இன்று வரை மனதில் மலரும் நினைவுகளாகப் பதிந்த வேறு தொடரை கூறுவது கடினம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பெரிய பெரிய ஸ்டார்கள் பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடர், அதன் புத்துணர்ச்சியான புதிய முறை ஆட்டம், என்று எதுவும் முதல் முறையாக நடக்கும் போது ஏற்படுத்தும் ஆர்வம் அடுத்தடுத்துக் குறையவே தொடங்கும் என்பது law of diminishing marginal utility என்று ஒப்புமைக்காக பொருளாதார சொற்பொருளில் வழங்கப்படலாம்.

அதே போல்தான் முதல் ஐபிஎல் தொடர் மெகா தொடராக அமைந்தது. அதுவும் ஜூன் 1, 2008 இரவு ஷேன் வார்ன் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் தோனி தலைமை சிஎஸ்கே அணிக்கும் இடையே டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியை மறக்க முடியாது. யெல்லோ ஆர்மிக்கு ஏகப்பட்ட ஆதரவு. தோனி அப்போதெல்லாம் சூப்பர் ஸ்டார். அப்போது முதலே தோனியின் பெட்டான ஜடேஜா எதிரணியில், அதாவது ராஜஸ்தன் அணியில் இருந்ததும் விசேஷம்.

வார்ன் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சற்றும் எதிர்பாராத விதமாக இறுதிக்குத் தகுதி பெற்றது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் கோப்பையை வெல்ல சாதகமாகப் பேசப்பட்ட அணி. ஆனால் நடந்ததென்னவோ வேறு, யூசுப் பத்தான் காட்டடி தர்பாரில் ராஜஸ்தான் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

சிஎஸ்கே அணி 2008-ல் : பார்த்திவ் படேல், வித்யூத் சிவராமகிருஷ்ணன், சுரேஷ் ரெய்னா, ஆல்பி மோர்கெல், தோனி, கபுகேதரா, பத்ரிநாத், மன்பிரீத் கோனி, பாலாஜி, முரளிதரன், மகாயா நிடினி.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: நீரஜ் படேல், ஸ்வப்னில் அஸ்னோட்கர், கம்ரன் அக்மல், ஷேன் வாட்சன், யூசுப் பதான், கைஃப், ரவீந்திர ஜடேஜா, ஷேன் வார்ன், சொகைல் தன்வீர், சித்தார்த் திரிவேதி, முனாப் படேல்.

Read More:  வீடு மேல் வீடாக வாங்கித் தள்ளும் எம்.எஸ்.தோனி
 டாஸ் வென்ற ஷேன் வார்ன் முதலில் சிஎஸ்கேவை பேட் செய்ய அழைத்தார். சிஎஸ்கே அணி 20 ஒவர்களில் 163/5 என்று முடிந்தது. பார்த்திவ் படேல் 33 பந்துகளில் 38 ரன்கள் எடுக்க ரெய்னா 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார், தோனி கடைசியில் இறங்கி 17 பந்துகளில் 2 சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 29 நாட் அவுட். யூசுப் பதான் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற லெஜண்ட் ஷேன் வார்ன் 4 ஓவர் 34 ரன்கள் விக்கெட் இல்லை.

இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அப்போது ஆர்வத்தைத் தூண்டிய தொடக்க வீரர் ஸ்வப்னில் அஸ்னோட்கர் 20 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் சடுதியில் விக்கெட்டுகளை இழந்து 7 ஓவர்களில் 42/3 என்று ஆக எல்லோ ஆர்மி வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியது.

அப்போது யூசுப் பதான், ஷேன் வாட்சன் ஆட்டத்தின் போக்கை மாற்றினர், சென்னை அணியிடமிருந்து வெற்றியைப் பறித்தனர். வாட்சன் சிறிய பங்களிப்புதான் என்றாலும் 28 முக்கிய ரன்களை எடுக்க யூசுப் பதான், வாட்சன் கூட்டணி 65 ரன்களைச் சேர்த்தனர்.

பிறகு இன்னொரு மினி சரிவு ஏற்பட்டது, ஆனால் கடைசியில் கேப்டன் வார்ன், பாகிஸ்தானின் சொகைல் தன்வீர் வெற்றியை உறுதி செய்தனர். சென்னை பீல்டிங்கும் சொதப்பலாக அமைந்தது, அதுவும் கடைசி ஓவர் திக் திக் ஓவராக அமைந்தது, எல்.பாலாஜி கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் வீசினார், 3 பந்துகள் டைட்டாக வீசினார்.

பிறகு ஒரு வைடை வீச பை ரன்னும் சேர்ந்தது. 2 பந்துகளில் 3 ரன்கள் என்று சமன்பாடு மாறியது. தன்வீர் டீப் மிட்விக்கெட்டில் அடித்து 2 ரன்களை ஓடி பிறகு கடைசி பந்தில் ஒரு ரன்னை எடுக்க முதல் ஐபிஎல் சாம்பியன் ஆனது ராஜஸ்தான் ராயல்ஸ். கேப்டன்சியில் தோனியை விட வார்ன் ஒரு படிமேலே நின்றார். யூசுப் பதான் 39 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 ரன்களை விளாசி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் செல்ல தொடர் நாயகன் விருதை ஷேன் வாட்சன் பெற்றார்.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, CSK, IPL, Rajasthan Royals

அடுத்த செய்தி