Home /News /sports /

குஜராத் டைட்டன்ஸ் இனி வரும் போட்டிகளிலெல்லாம் தோற்கும் - பட்சி சொல்லுது

குஜராத் டைட்டன்ஸ் இனி வரும் போட்டிகளிலெல்லாம் தோற்கும் - பட்சி சொல்லுது

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஒரிஜினல் பலவீனங்கள் அம்பலமாகி 2 போட்டிகளில் தோற்றுள்ளது, அதுவும் நேற்றைய போட்டியில் அதன் பேட்டிங் படுமோசமாகி 143/8 என்று மடிந்தது, கிங்ஸ் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.

    குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஒரிஜினல் பலவீனங்கள் அம்பலமாகி 2 போட்டிகளில் தோற்றுள்ளது, அதுவும் நேற்றைய போட்டியில் அதன் பேட்டிங் படுமோசமாகி 143/8 என்று மடிந்தது, கிங்ஸ் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.

    பேட்டிங்கில் விருத்திமான் சஹாவின் நம்பகத்தன்மையில்லாத பார்மை நம்பியிருக்கிறது, ஷுப்மன் கில் சரியாக ஆடுவதில்லை, ஹர்திக் பாண்டியாவும் சோபிக்கவில்லை. தொடக்கம் சரியில்லை, மிடில் ஆர்டரும் சரியில்லை பினிசிங்கில் மில்லர், திவேத்தியா, ரஷீத் கான் இருக்கிறார்கள், இவர்களும் பிரஷர் சிச்சுவேஷனில் முதலில் பேட் செய்தால் சொதப்புவார்கள் என்பது நேற்று அம்பலமானது. பவுலிங் மட்டுமே குஜராத்தில் சிறப்பாக உள்ளது.

    எந்த நிமிடத்திலிருந்தும் தொடர் தோல்விகளைச் சந்தித்து உடைந்து நொறுங்கக் கூடிய அணியாகவே குஜராத் டைட்டன்ஸ் இருக்கிறது. இதைத்தான் ஆகாஷ் சோப்ரா சுற்றி வளைத்து கூறியிருக்கிறார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்தின் வீடியோ பதிவில் அவர் கூறும்போது,

    “குஜராத் அணியில் வெளிப்படையாக நிறைய பிழைகள் உள்ளன. அவர்கள் பேட்டிங்கில் பவர் இல்லை. எப்போதாவது ஒரு அணி சவாலை எதிர்கொள்ளலாம், ஆனால் அடிக்கடி குஜராத் அணி சவாலை எதிர்கொண்டு வருவதை பார்க்கிறோம். 8 போட்டிகளில் 8 வெவ்வேறு ஆட்ட நாயகர்கள். இது பரவாயில்லை, 140 ரன்கள்தான் முதலில் பேட் செய்யும் போது அடிக்க முடிகிறது என்றால், நிச்சயம் உங்களால் வெல்ல முடியாது. நிச்சயம் இப்படி ஆடினால் 10 முறையில் 9 முறை தோற்கத்தான் வாய்ப்பு.

    எனவே குஜராத் டைட்டன்ஸ் மோசமான கேம்களை எதிர்கொள்ளவிருக்கிற்து. ஆனால் என்னைப்பொறுத்தவரை அந்த அணியின் கவலை ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா சொதப்புவதே. இது அடிக்கடி நடக்கிறது, இது தீங்கான அறிகுறி. சில வேளைகளில் டேவிட் மில்லர், திவேத்தியா உங்களை விடுவிக்கலாம், வெற்றி பெறச் செய்யலாம், எப்போதும் முடியாது” என்கிறார் ஆகாஷ் சோப்ரா.

    ஒரு ஐபிஎல் தொடரில் இப்படித்தான் வரிசையாக 7-8 போட்டிகளில் டெல்லி டேர் டெவில்ஸ் வெற்றி பெற்றது, கடைசியில் தோல்விகளைச் சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கு வர முடியாமல் வெளியேறியது. குஜராத் டைட்டன்சுக்கும் இது நடக்கும் என்றே பட்சி சொல்கிறது, ஆகாஷ் சோப்ரா அதை மிகச்சரியாக கணிப்பதாகவே தெரிகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Gujarat Titans, IPL 2022

    அடுத்த செய்தி