ஐ.பி.எல் தற்போதைக்கு சாத்தியமில்லை - பிசிசிஐ பொருளாளர்

IPL 2020 | ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவது குறித்து ஆகஸ்டில் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

ஐ.பி.எல் தற்போதைக்கு சாத்தியமில்லை - பிசிசிஐ பொருளாளர்
ஐ.பி.எல்
  • Share this:
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் ஐ.பி.எல் தொடரை நடத்துவது தற்போது சாத்தியமில்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் திருவிழவான ஐபிஎல் தொடரை நடத்துவது சாத்தியமில்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். அதற்கேற்ற திட்டங்கள் குறித்தும் ஆலோசித்து வருகிறோம். வீரர்கள் தங்களின் உள்ளூர் மைதானங்களில் பயிற்சியை தொடங்கலாம். ஆனால் மொத்த வீரர்களையும் ஒன்றிணைப்பது தற்போது முடியாது.


ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவது குறித்து ஆகஸ்டில் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதேசமயம் தொடரை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை ஐசிசி நடத்தும் தொடர். இது உலகளவிலான வருவாயை ஈட்டி தரும். ஐசிசி உலகக்கோப்பையை சிறந்த முறையில் நடத்தும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்றும் அருண் துமல் கூறியள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading