இரும முடியவில்லை, உறங்க முடியவில்லை: 2 மாத கால வேதனையைப் பகிர்ந்த சச்சின்

சச்சின் டெண்டுல்கர்

2007-ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்ட போது ஒருநாள் போட்டி ஒன்றில் ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தரின் அதிரடி வேகப்பந்து ஒன்று சச்சின் விலா எலும்பைத் தாக்கியது.

 • Share this:
  150 கிமீ வேகம் கொண்ட அக்தரின் அந்தப் பந்தின் தாக்கத்தை தாங்கிய விலா எலும்பு பிற்பாடு கொடுத்த தொல்லைகளையும் பட்டபாடையும் விவரித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

  ஆனால் சச்சின் டெண்டுல்கர் காயத்தினால் விலகவில்லை, தொடர்ந்து ஆடியுள்ளார், அடுத்ததாக ஆஸ்திரேலியா தொடருக்காகத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார்.

  விலா எலும்பில் வாங்கிய அடியினால் சச்சின் டெண்டுல்கரினால் இருமக் கூட முடியவில்லை, இரவு வலியினால் உறங்க முடியாமல் போயுள்ளது, 2 மாத காலம் இவ்வாறு அவதிப்பட்டதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

  அன் அகாடமி நிகழ்ச்சி ஒன்றில் இதை நினைவுகூர்ந்த சச்சின் டெண்டுல்கர், “விலா எலும்பில் அடி வாங்கினேன். பாகிஸ்தான் இங்கு வந்து ஆடினார்கள். ஷோயப் அக்தர் பந்தில் முதல் ஓவரிலேயே விலாவில் பந்து வந்து தாக்கியது. அது மிகவும் வலி ஏற்படுத்தியது, ஒரு மாதம் ஒன்றரை மாதம், இரண்டு மாதங்கள் வரை வலி நீடித்தது. இருமல் வந்தா இரும முடியாது, உறக்கம் வராது, புரண்டு படுக்க முடியாது என்று பல தொல்லைகள்.

  ஆனால் தொடர்ந்து ஆடினேன், என்னுடைய மார்பு கவசத்தை நானே உருவாக்கிக் கொண்டேன். மீதமுள்ள ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் தொடரையும் ஆடிமுடித்தேன். ஆஸ்திரேலியா செல்லும் முன் எவ்வளவு கிரிக்கெட் இருந்ததோ அனைத்தையும் ஆடினேன்.

  ஆஸ்திரேலியா சென்று முழு டெஸ்ட் தொடரையும் ஆடினேன், முத்தரப்பு ஒருநாள் தொடரான விபி தொடரிலும் ஆடினேன். அங்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. இந்தியாவுக்குத் திரும்பி உடல் முழுதும் ஸ்கேன் செய்தேன். அப்போதுதான் விலாவில் வாங்கிய அடி ஏற்படுத்திய தாக்கம் பற்றி மருத்துவர் தெரிவித்தார்.

  நான் என் விலாவைப் பற்றி அவரிடம் கேட்கவில்லை, இடுப்பு காயம் பற்றியே கவலையடைந்தேன், ஏனெனில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கவிருந்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் உடற்தகுதி பெறவில்லை, 7 ஐபிஎல் போட்டிகளில் நான் ஆடவில்லை. அப்போதுதான் மருத்துவர் விலா எலும்பு முறிந்திருக்கலாமென்றார். இது என்னை 2 மாதங்களுக்கு படுத்தி எடுத்தது” என்றார் சச்சின் டெண்டுல்கர்
  Published by:Muthukumar
  First published: