வீரர்களின் செல்வாக்கு என்ன என்பது முக்கியமல்ல தற்போது ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கே தன் சிறந்த அணியில் இடம் என்கிறார் சச்சின் டெண்டுல்கர். ஆம்! அவரது சிறந்த ஐபிஎல் 2022 அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, உம்ரன் மாலிக் இல்லை.
சச்சின் டெண்டுல்கர் தனது சிறந்த அணிக்கு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸின் சாம்பியன் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளார்.
“வீரர்களின் செல்வாக்குடன் எனது இந்த அணி தொடர்புடையதல்ல, ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடியவர்களுக்கே இடம். ஹர்திக் பாண்டியா இந்த தொடரின் தனித்துவ கேப்டன் எனவே அவர் என் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான் எப்போதும் சொல்வேன் வருந்தாதே, கொண்டாடு என்று. நாம் கொண்டாட்ட மனநிலையில் இருந்தால் எதிரணியினரை நாம் சாமர்த்தியமாக வீழ்த்த முடியும். ஹர்திக் இதைத்தான் செய்தார்.
ஆரஞ்சு கேப் பட்லர் தொடக்க வீரர், அருமையாக ரன்களை குவிக்கும் அதே வேளையில் ஸ்ட்ரைக்கையும் ரொடேட் செய்யும் ஷிகர் தவான் தொடக்க வீரர்கள். 3ம் இடத்தில் கே.எல்.ராகுல். அவரது நிலையான, சீரான ஸ்கோரிங் பேட்டிங் எனக்கு பிடித்திருக்கிறது. சிங்கிள்களையும் எடுக்கிறார், தேவைப்பட்டால் சிக்சர்களையும் விளாசுகிறார்.
பாண்டியாவும் இந்த ஐபிஎல் தொடரில் சில முக்கியமான இன்னிங்ஸ்களை ஆடினார், ராகுல் போலவே ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யவும் தெரியும் சிக்சர்கள் விளாசவும் முடியும். இவரது பேட் ஸ்விங் அருமை.
டேவிட் மில்லர் ஒரு பெரிய அதிரடி வீரர், இன்னொரு இடது கை வீரர் அணியில் இருந்தால் வலது -இடது சேர்க்கை எப்போதும் முக்கியமானது. இடது கை வீரர் என்பதால் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால் நான் டேவிட் மில்லரைத் தேர்வு செய்கிறேன். இவர் மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் விளாசுகிறார், எல்லாம் முறையான கிரிக்கெட் ஷாட்கள். இவரைப்பார்ப்பது ஒரு பெரிய ட்ரீட்.
லியாம் லிவிங்ஸ்டன் சிக்சர்கள் விளாசுவதில் பெரிய ஆள், மேலும் பவுலிங்கும் செய்கிறார், நான் அவரை ஆஃப் ஸ்பின் வீசச் சொல்வேன். அடுத்து தினேஷ் கார்த்திக் இவர் அமைதியாக ஆடுகிறார், 360 டிகிரி ஆடுகிறார். அபாயகரமான வீரர் இதைத்தான் தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் செய்தார். ” என்றார் சச்சின்.
பந்து வீச்சில் ரஷீத் கான், ஷமி, பும்ரா, செஹல் ஆகியோரை சச்சின் தேர்வு செய்ய, சீசனின் சென்சேஷன் உம்ரன் மாலிக்கை ஏனோ சச்சின் தேர்வு செய்யவில்லை.
சச்சின் ஐபிஎல் லெவன் இதோ:
ஜாஸ் பட்லர், ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், லியாம் லிவிங்ஸ்டன், தினேஷ் கார்த்திக் ரஷீத் கான், முகமத் ஷமி, பும்ரா, செஹல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hardik Pandya, IPL 2022, Rohit sharma, Sachin tendulkar, Virat Kohli