• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 Team XI | தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா இல்லை- ஆகாஷ் சோப்ராவின் சிறந்த ஐபிஎல் 2021 லெவனில் இடமில்லை

IPL 2021 Team XI | தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா இல்லை- ஆகாஷ் சோப்ராவின் சிறந்த ஐபிஎல் 2021 லெவனில் இடமில்லை

தோனி - விராட் கோலி

தோனி - விராட் கோலி

ஆகாஷ் சோப்ரா ஐபிஎல் 2021 டீம் லெவனை அறிவித்துள்ளார். இதில் தோனி, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு அவர் இடம்கொடுக்கவில்லை.

  • Share this:
    யூடியூப் சேனலில் சமீபமாக வெளியிட்ட வீடியோவில் முன்னாள் இந்திய தொடக்க வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் எழுத்தாளருமான ஆகாஷ் சோப்ரா ஐபிஎல் 2021 டீம் லெவனை அறிவித்துள்ளார். இதில் தோனி, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு அவர் இடம்கொடுக்கவில்லை.

    தோனி இல்லாததை புரிந்து கொள்ள முடிகிறது, காலம்போன காலத்தில் அவர் பெயர் எதற்கு என்று விட்டிருக்கலாம். ஆனால் கோலி, பும்ரா, ரோகித் சர்மாவை ஒதுக்கியது ஏன் என்று தெரியவில்லை.

    தனது ஐபிஎல் 2021-லெவனில் தேர்ந்தெடுத்த வீரர்களையும் அதற்கான காரணங்களையும் ஆகாஷ் சோப்ரா விளக்கும் போது கூறியதாவது:

    நான் கே.எல்.ராகுலை தொடக்கத்தில் தேர்வு செய்கிறேன். 3 பெரிய இன்னிங்ஸ்களை அவர் ஆடியுள்ளார். இதில் 90க்கும் மேல் 2 முறையும், ஒரு 60+ ஸ்கோரையும் எடுத்துள்ளார். இவை அனைத்துமே கிங்ஸ் லெவன் பஞ்சாபின் வெற்றியில் முடிந்தன. அவர் எப்போது ரன்கள் அடித்தாலும் அவர் அணி வெல்கிறது. நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

    இவருடன் தொடக்கத்தில் ஷிகர் தவானை தேர்வு செய்கிறேன். அவர் ஆரஞ்சு தொப்பி வீரர். கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து ஒரு மேம்பட்ட ஷிகர் தவானை இந்த ஐபிஎல் தொடரில் பார்க்கிறேன்.

    3ம் நிலையில் சிஎஸ்கேயின் ஃபாப் டுபிளெசியை தேர்வு செய்கிறேன் இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஆக்ரோஷ இன்னிங்ஸ்களைப் பார்த்தோம். இவர் இல்லாவிட்டால் சிஎஸ்கே மீண்டெழுந்திருக்க வாய்ப்பில்லை.

    4ம் நிலையில் கிளென் மேக்ஸ்வெல், அவர் கடினமான சென்னை பிட்சிலும் சோபித்தார். முதல் 5 போட்டிகளில் உண்மையில் தனித்துவமாக ஆடினார்.

    ஏ.பி.டிவில்லியர்ஸ் 5ம் இடத்தில் தேர்வு செய்யப்படுகிறார். அகமதாபாத்திலும், சென்னையில் கொல்கத்தா அணிக்கும் எதிராக ஆடிய இன்னிங்ஸ் அபரிமிதமானது.

    6ம் இடத்தில் நான் ரிஷப் பந்த்தை இறக்குவேன். இது இவருக்கு மிகவும் பின்வரிசையாகும் ஆனால் முன்வரிசையில் இடது கை வீரர் தேவைப்பட்டால் பந்த்தை முன்னால் இறக்கிக் கொள்ளலாம். என் அணியில் பந்த்தான் கீப்பர், ஏபி.டிவில்லியர்ஸ் அல்ல.

    7ம் நிலையில் ஜடேஜாவை விட்டால் வேறு யார் ஆல்ரவுண்டர் இங்கே?

    8ம் நிலையில் கிறிஸ் மோரிஸ். இவர் ஏதாவது ஒன்றைச் செய்து விடுகிறார், பவுலிங் அல்லது பேட்டிங்.

    9, 10,11 ஆம் இடங்களுக்கு நான் இந்திய வீரர்களையே தேர்வு செய்கிறேன், ராகுல் சாஹர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் .

    என்றார் ஆகாஷ் சோப்ரா.

    ஆகாஷ் சோப்ராவின் ஐபிஎல் 2021 டீம் லெவன் அணி வருமாறு:

    IPL 2021 Team XI: ராகுல், தவான், டுபிளெசிஸ், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், பந்த், ஜடேஜா, மோரிஸ், ராகுல் சாஹர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: