45 வயதுக்கு முன்பாக ஓய்வா? நோ-சான்ஸ்: உற்சாகத்தின் உச்சியில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்

45 வயதுக்கு முன்னால் ஓய்வு அறிவிப்பதென்பது சான்ஸே இல்லை. ஆம் 2 உலகக்கோப்பைகள் ஆட வேண்டியுள்ளது.

 • Share this:
  41 வயதாகும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் இப்போதைக்கு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

  பவுலர்களின் சிம்ம சொப்பன பேட்ஸ்மெனான கிறிஸ் கெய்ல் உலகம் முழுதும் கிரிக்கெட் டி20 லீகுகளில் மட்டையைச் சுழற்றி வருகிறார். இவர் இந்தியாவில் நடைபெறவிருக்கும் 2021 உலகக்கோப்பை டி20 மட்டுமல்ல 2022 உலகக்கோப்பை டி20-யையும் குறிவைத்துள்ளார்.

  ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கிறிஸ் கெய்ல் கூறியதாவது:

  ஆம்! இப்போதைக்கு ஓய்வு அறிவிக்கும் எண்ணமில்லை. நான் இன்னும் 5 ஆண்டுகள் ஆடுவேன். 45 வயதுக்கு முன்னால் ஓய்வு அறிவிப்பதென்பது சான்ஸே இல்லை. ஆம் 2 உலகக்கோப்பைகள் ஆட வேண்டியுள்ளது.

  தற்போது அல்டிமேட் கிரிக்கெட் சாலஞ்ச் என்ற தொடரில் கிறிஸ் கெய்ல் ஆடவிருக்கிறார். மொத்தம் 16 போட்டிகள் கொண்ட புதுவிதமாக ஆடும் கிரிக்கெட் ஆகும் இது. உள்ளரங்க கிரிக்கெட் போல் இது கூண்டில் ஆடப்படும் கிரிக்கெட் என்று கூறப்படுகிறது.

  ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெய்லுக்கு தாமதமாக வாய்ப்பு வழங்கப்பட்டாலும் யுஏஇயில் அவர் 7 இன்னிங்ஸ்களில் 288 ரன்களை 137.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். ஒரு 99 உட்பட 3 அரைசதங்களை விளாசினார் கெய்ல்.

  ‘வயது என்பது வெறும் எண் தான்’ என்கிறார் உற்சாகத்தின் உச்சியில் இருக்கும் யுனிவர்ஸ் பாஸ்.
  Published by:Muthukumar
  First published: