ஐபிஎல் தொடரிலிருந்து தற்போதைக்கு ஓய்வு இல்லை - தோனி விளக்கம்

எம்.எஸ். தோனி (கோப்புப்படம்)

எம்.எஸ். தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்தான் என பரவிய செய்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 • Share this:
  ஐபிஎல் தொடரிலிருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஓய்வுபெற்றார். இந்த நிலையில் துபாயில் தொடங்கிய இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மைதானத்தில் களமிறங்கிய தோனி, ரசிகர்களை மகிழ்வித்தார்.

  இருப்பினும், சிஎஸ்கே அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததாலும், தோனியும் தொடர்ந்து ரன் குவிக்க தடுமாறியதாலும், அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்தான் என தகவல் பரவத் தொடங்கியது.

  இது தொடர்பாக சமீபத்தில் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை செயலதிகாரி காசி விஸ்வநாதன், அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவிற்கு தோனியே வழிநடத்துவார் என நம்புவதாக கூறினார்.

  Also read: ஐபிஎல் 2020 : சென்னை வெற்றி, பிளே ஆப் வாய்ப்பை இழந்தது பஞ்சாப்!

  இந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது தோனியிடம், இதுதான் சிஎஸ்கே அணிக்கான கடைசி ஆட்டமா என வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தோனி, கண்டிப்பாக இல்லை எனக்கூறினார்.  ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: