Home /News /sports /

ஐபிஎல் மெகா ஏலம்: மொத்தம் 590 வீரர்கள், கிறிஸ் கெய்ல் இல்லை- பிசிசிஐ முழுப் பட்டியல் வெளியீடு

ஐபிஎல் மெகா ஏலம்: மொத்தம் 590 வீரர்கள், கிறிஸ் கெய்ல் இல்லை- பிசிசிஐ முழுப் பட்டியல் வெளியீடு

கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்

ஐபிஎல்லின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் கெய்ல், 2022 ஏலத்தில் நுழையவில்லை. அவர் ஆறு சதங்களை அடித்துள்ளார், 142 போட்டிகளில் 4965 ரன்களுடன், போட்டியின் வரலாற்றில் எல்லா நேரத்திலும் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் மற்றும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் வரவிருக்கும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் (IPL 2022 Mega Auction) வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. முழுமையான பட்டியலை பிசிசிஐ வெளியிட்டதில் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கேற்ப இரண்டு அதிரடி மன்னர்கள் கெய்ல், பென் ஸ்டோக்ஸ் இல்லை என்பது வருத்தமே.

    இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2022 சீசனுக்கு முன்னதாக நடைபெறவிருக்கும் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் முழுமையான பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) செவ்வாயன்று வெளியிட்டது. கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    "இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 வீரர்கள் ஏலப் பட்டியல், பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் இரண்டு நாள் மெகா ஏலத்தின் போது மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    ரூ.2 கோடி உச்சவரம்பு கொண்ட ரிசர்வ் விலைப் பட்டியல் வீரர்களில் 48 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ரூ.1.5 கோடி விலையின் கீழ் 20 வீரர்கள் உள்ளனர். ரூ.1 கோடி ஏலவிலைப் பிரிவில் 34 வீரர்கள் உள்ளனர்.

    Also Read: உலகின் சிறந்த விளையாட்டு வீரர் விருது வென்று இந்திய ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சாதனை

    ஏலத்தில் பதிவு செய்த 590 வீரர்களில், 228 ஏற்கெனவே ஆடிய வீரர்கள், 355 பேர் ஆடாத வீரர்கள் மற்றும் 7 பேர் அசோசியேட் நேஷன்ஸைச் சேர்ந்தவர்கள்.

    ஐபிஎல்லின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் கெய்ல், 2022 ஏலத்தில் நுழையவில்லை. அவர் ஆறு சதங்களை அடித்துள்ளார், 142 போட்டிகளில் 4965 ரன்களுடன், போட்டியின் வரலாற்றில் எல்லா நேரத்திலும் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஏழாவது இடத்தில் உள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Chris gayle, IPL 2022

    அடுத்த செய்தி