சஞ்சு சாம்சன் அடித்த பந்தை பவுண்டரி எல்லைக்குள் தாவிப் பிடித்த பூரண்: கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டு

சஞ்சு சாம்சன் அடித்த பந்தை பவுண்டரி எல்லைக்குள் தாவிப் பிடித்த பூரண்: கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டு

நிக்கோலஸ் பூரண்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் நிகோலஸ் பூரண் சிக்ஸ் லைனில், அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்ததை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டிவருகின்றனர்.

  • Share this:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் நிகோலஸ் பூரண் சிக்ஸ் லைனில், அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் உறைய வைத்தார். சச்சின், கங்குலி, சேவாக் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் பூரனுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 9 வது லீக் போட்டியில் 226 ரன்கள் எடுத்து தபஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது.

போட்டியின் போது பஞ்சாப் அணி வீரர் முருகன் அஸ்வின் வீசிய 8 வது ஓவரின் மூன்றாவது பந்தை சஞ்சு சாம்ஷன் சிக்ஸ் அடிக்க அதை சிக்ஸ் லைனில் இருந்து அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து உள்ளே எறிவார் நிகோலஸ் பூரண்.

மைதானத்தில் அமர்ந்து நேரில் பார்த்துக்கொண்டிருந்த உலகின் தலைசிறந்த ஃபீல்டரும் பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளருமான ஜாண்டி ரோட்ஸ் எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினார்.

கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் "என் கிரிக்கெட் வாழ்க்கையில் இது போன்ற பீல்டிங்கை நான் பார்த்தது இல்லை என்றும், அற்புதமான பீல்டிங் என்றும் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசி ஐ தலைவருமான கங்குலி இதுபோன்ற பீல்டிங்கால் தான் ஐபிஎல் போட்டி உலகத்தரம் வாய்ந்த போட்டியாக உள்ளது என பதிவிட்டுள்ளார். அபாரமான திறமை என புகழாரம் சூட்டியுள்ளார்.
ORANGE CAP:
PURPLE CAP:

கிரிக்கெட் வர்ணனையில் இருந்த கெவின் பீட்டர்சன், இது சாத்தியம் இல்லாத பீல்டிங் எனவும், நான் பார்த்ததிலேயே இதுதான் சிறந்த ஃபீல்டிங் என வர்ணித்தார். புவி ஈர்ப்பு விசையை மறந்து, அதை மிஞ்சும் அளவிற்கு பூரன் அந்தரத்தில் பறந்து ஃபீல்டிங் செய்துள்ளார். மிகவும் அற்புதமான பீல்டிங் என அதிரடி மன்னன் சேவாக் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் அந்தரத்தில் பறக்கும் புரனின் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. ஒட்டுமொத்த ரசிகர்களும் இதற்கு முன் இதுபோன்ற பீல்டிங்கை பார்த்தது இல்லை என ஆனந்தமடைகின்றனர்.
Published by:Karthick S
First published: