ஐபிஎல் 2021: 6 ஆட்டங்களில் 4 டக் அவுட்.. நிகோலஸ் பூரானை படாதபாடு படுத்தும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் 2021: 6 ஆட்டங்களில் 4 டக் அவுட்.. நிகோலஸ் பூரானை படாதபாடு படுத்தும் நெட்டிசன்கள்!

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் நிகோலஸ் பூரான்.

நிகோலஸ் பூரான் கடைசியாக பங்கேற்ற போட்டிகளில் அவர் எடுத்த ஸ்கோர் = 0,0,9,0,19,0

  • Share this:
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் டக் அவுட் ஆகி மோசமான சாதனை செய்தவர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் நிகோலஸ் பூரான்.

மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்தவரும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவருமான நிகோலஸ் பூரானுக்கு நடப்பு ஐபிஎல் சீசன் மீளமுடியாத மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்த சீசனில் அவர் அடுத்தடுத்து போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றி வருகிறார். நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் நிகோலஸ் பூரான் டக் அவுட் ஆகி மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் நிகோலஸ் பூரான்.


அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று பெங்களூரு அணியை எதிர்கொண்ட கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்து 3வது வெற்றியை ருசித்தது. இந்தப் போட்டியில் 25வது அரைசதம் அடித்த பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் 91 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்ச் தொப்பியை தனதாக்கினார். ஆனால் இதே போட்டியில் மேலும் ஒரு முறை டக் அவுட் ஆகி மோசமான சாதனையாளர் பட்டியலில் இணைந்திருக்கிறார் நிகோலஸ் பூரான்.

இடது கை ஆட்டக்காரரான பூரான் முதல் முறையாக ராஜஸ்தான் ராயல்ஸுடனான போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான அடுத்த போட்டியிலேயே 2 பந்துகளில் டக் அவுட் ஆனார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் எந்த பந்தையுமே சந்திக்காமல் ரன் அவுட் ஆகி 3வது டக் அவுட்டும் ஆனார்.

இந்நிலையில் பெங்களூரு அணியுடனான நேற்றைய போட்டியில் 3வது பந்தில் பூரான் டக் அவுட் ஆகியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் மொத்தமாக 6 இன்னிங்ஸில் விளையாடி அதில் 4 போட்டிகளில் டக் அவுட் ஆகி உள்ளார். மற்ற இரண்டு போட்டிகளில் 9 மற்றும் 19 ரன்கள் அடித்துள்ளார்.

நிகோலஸ் பூரான் கடைசியாக பங்கேற்ற போட்டிகளில் அவர் எடுத்த ஸ்கோர் = 0,0,9,0,19,0தொடர்ந்து டக் அவுட் ஆகி வரும் நிகோலஸ் பூரான் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் ஹர்ஷல் கிப்ஸ் (2009), மிதுன் மன்ஹாஸ் (2011), மனிஷ் பாண்டே (2012), ஷிகர் தவான் (2020) ஆகியோர் ஏற்கனவே உள்ளனர்.

இதனிடையே டக் அவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள பூரானை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மீம்ஸ் மூலம் அவரை கலாய்த்து தள்ளுகின்றனர்.

முன்னதாக இந்தியாவில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவிவருவதால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனது சம்பளத்தில் ஒரு பங்கை நன்கொடையாக அளிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Arun
First published: