முகப்பு /செய்தி /விளையாட்டு / இலங்கை தொடரை தவிர்க்கும் நியூசிலாந்து வீரர்கள்… ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி…

இலங்கை தொடரை தவிர்க்கும் நியூசிலாந்து வீரர்கள்… ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி…

கேன் வில்லியம்சன் - டிம் சவுத்தி

கேன் வில்லியம்சன் - டிம் சவுத்தி

தற்போது இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கு அணி நிர்வாகம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன், டெவோன் கான்வே உள்ளிட்ட வீரர்கள் விரைவில் இந்தியா வரவுள்ளனர். இதையொட்டி, இலங்கை அணியுடனான ஆட்டத்தில் அவர்கள் தேசிய அணியில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் குஜராத் – சென்னை அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து வீரர்கள் கேன் வில்லியம்சன் குஜராத் டைட்டன்ஸ் அணியிலும், டிம் சவுத்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும், டெவோன் கான்வே மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் சென்னை அணியிலும் இடம்பெற்றுள்ளனர். தற்போது இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. 2 ஆவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா புறப்பட்டு செல்லவுள்ளனர்.

இதேபோன்று பெங்களூரு அணியின் ஃபின் ஆலன், கொல்கத்தா அணியின் லோக்கி பெர்கூசன், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கிளென் ஃபிலிப் ஆகியோர் இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து மார்ச் 25 ஆம் தேதி இந்தியா புறப்படுகின்றனர். கேன் வில்லியம்சன் ஐபிஎல் மேட்ச்சுகளில் முழுமையாக விளையாடவுள்ளதால் ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

First published:

Tags: IPL 2023