என் வெற்றியின் பின்னால் தோனிக்கு பங்கு உண்டு, அவர் என் நண்பர், சகோதரர்- ஹர்திக் பாண்டியா மனம் திறப்பு
என் வெற்றியின் பின்னால் தோனிக்கு பங்கு உண்டு, அவர் என் நண்பர், சகோதரர்- ஹர்திக் பாண்டியா மனம் திறப்பு
பாண்டியா- தோனி.
முதல் ஐபிஎல் தொடரிலேயே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் அவரது புதிரான உடல் ஃபிட்னெஸ் மற்றும் ஆட்டத்திறன் பற்றி கேள்வி எழுப்புகையில், ‘என் பெயரை பயன்படுத்தினால் என்னை விமர்சனம் செய்தால் நியூஸ் அதிகம் விற்கிறது’ என்று ஒரு பதிலை கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்கில் ஒரு தனி முதிர்ச்சி தெரிகிறது, ஆர்த்தடாக்ஸ் அல்லது முறையான கிரிக்கெட் ஷாட்களையே அவர் ஆடுகிறார், தரையோடு ஆடுவதில் அதிக நாட்டம் இருப்பதாகத் தெரிகிறது.
தொடக்கத்தில் கொஞ்சம் கோபாவேசம், கொஞ்சம் திமிர், கொஞ்சம் அகராதித்தனம், கேப்டன் என்ற ஹோதா ஆகிய கலவையுடன் இருந்த ஹர்திக் பாண்டியா அதன் பிறகு முகமது ஷமியின் அறிவுரையின் பேரில் விவேகத்தையும் எளிமையையும் ஆர்ப்பாட்டமின்மையையும் கற்றுக் கொண்டது போல் தெரிகிறது.
இந்நிலையில் அவரது உடல்நிலை, உடல் தகுதி, பவுலிங் பற்றி கேள்வி எழுப்புகிறவர்கள் குறித்து அவர் கூறும்போது, “பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் அவர்கள் வேலை அது. நான் ஒன்றும் செய்வதற்கில்லை. ஹர்திக் பாண்டியா பெயர் இருந்தால் செய்திகள் அதிகம் விற்கின்றன. எனக்கு அது குறித்து எந்த பிரச்சனையும் இல்லை, நான் புன்னகையுடன் அதைச்சுலபமாக எடுத்துக் கொள்கிறேன்.
மகேந்திர சிங் தோனி என் வாழ்க்கையில் பெரிய பங்காற்றியிருக்கிறார். தோனி சிறந்த நண்பர், சகோதரர்.. என் குடும்பத்தில் ஒருத்தர் போல் தோனி. அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட வகையில் வலுவாகத் திகழ்வது இது குறித்து நான் உண்மையில் பெருமைப்படுகிறேன்.
பெரும்பாலும் 4ம் இடத்தில்தான் இறங்குகிறேன். அனைத்து தரப்புகளையும் நிறைவாகச் செய்வதாகவே உணர்கிறேன். கேப்டன்சிக்கு முன்னால் கூட அனைத்துச் சூழ்நிலைகளிலும் கூலாக இருப்பேன். கூலாக இருந்தால்தான் நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.
என் வாழ்க்கையிலும் சரி, என் கிரிக்கெட் பயணத்திலும் சரி கூடுதலாக ஒரு 10 விநாடிகள் யோசித்து முடிவெடுப்பதுதான் என் பாணி, அவசரப்பட மாட்டேன்” என்றார் ஹர்திக் பாண்டியா.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.