சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணி ஐபிஎல் 2022 சீசனில் முதலில் 2 தோல்விகளுடன் தொடங்கியது. பிறகு 5 வெற்றிகளைப் பெற்றது, மீண்டும் 5 தோல்விகளைச் சந்தித்து பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. கேன் வில்லியம்சனின் மோசமான பார்ம், கேப்டன்சி போன்றவற்றை விட டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் காயம்தான் அணியின் பின்னடைவுக்குக் காரணம் என்கிறார் டாம் மூடி.
அதிரடி வேகத்தில் நெருப்பை உமிழும் உம்ரான் மாலிக் மற்றும் அனுபவம் வாய்ந்த ஜோடியான புவனேஷ்வர் குமார் மற்றும் டி நடராஜன் ஆகியோரைக் கொண்ட ஒரு வலிமையான பந்து வீச்சினால் சன் ரைசர்ஸ் கொஞ்சம் வலுவாகவே இருந்தது. இருப்பினும் காயம் காரணமாக நடராஜனால் சீசனை முடிக்க முடியவில்லை. கூடுதலாக, SRH சீசனின் பெரும்பகுதிக்கு வாஷிங்டன் சுந்தர் விளையாட முடியாமல் போனது, அவர்களின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் துறைகளை பாதித்தது.
இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாலர் யூடியூப் சேனலில் கூறும்போது, “போட்டியின் நடுவில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோருக்கு ஏற்பட்ட காயங்கள் உண்மையில் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி வீசியது. அதனால் வெற்றியின் உத்வேகத்தை மீட்டெடுப்பது எங்களுக்கு கடினமாக இருந்தது.
நிறைய விஷயங்களில் நாங்கள் பணியாற்ற நிறைய இருக்கிறது. அதில் கேள்வியே இல்லை. இதை நாங்களும் அறிந்திருக்கிறோம். நாங்கள் அட்டவணையில் இன்னும் மேலே இருக்க விரும்பினோம். ஆனால் இந்த போட்டியின் நடு கட்டத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி எறிந்தன.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான அந்த ஆட்டம், அந்த நேரத்தில் நாங்கள் எதிர்பார்க்காத விதத்தில் அவர்கள் விரட்டியபோது, கடைசி இரண்டு ஓவர்களில் நாங்கள் தோற்றோம், கிட்டத்தட்ட குஜராஜ் தோல்விதான் என்ற நிலையிலிருந்து வென்றது. ஆனால் இதுதான் டி20 கிரிக்கெட் என்ன செய்வது?” என்கிறார் டாம் மூடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2022, SRH, T natarajan, Washington Sundar