• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சன்ரைசர்ஸ் அணியை இத்தனை ரன்களில் சுருட்டினால் மும்பை அணிக்கு ப்ளே ஆப் வாய்ப்பு

சன்ரைசர்ஸ் அணியை இத்தனை ரன்களில் சுருட்டினால் மும்பை அணிக்கு ப்ளே ஆப் வாய்ப்பு

SRH vs MI

SRH vs MI

மும்பை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனால் மிகப் பெரிய ரன்ரேட்டில் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

  • Share this:
    நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை, டெல்லி, பெங்களூரு அணிகள் முன்னேறி உள்ளன. நான்கவாது அணியாக டெல்லி மற்றும் மும்பை அணிக்கு வாய்ப்பு உள்ளது. ரன்ரேட் வித்தியாசத்தில் கொல்கத்தா தற்போது 4-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்றால் பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

    அதன்படி இன்று அபுதாபியில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 82 ரன்களும் இஷான் கிஷான் 84 ரன்களும் விளாசினார்கள். மும்பை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் சன்ரைசர்ஸ் அணியை 65 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.

    இதுப்போன்ற இமலாய சாதனை படைத்தால் நடப்பு சாம்பியன் மும்பை ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் ஆட்டத்தின் முடிவில் தான் இது தெரிய வரும். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷான்  11 பவுண்டரிகள் 4 சிக்ஸ்ர்கள் விளாசி 84 ரன்கள் அடித்து அவுட்டாகினார்.

    மும்பை அணி மற்றொரு இளம்வீரர் சூர்யகுமார் யாதவ் இறுதி ஓவர்களில் ரன்வேட்டையில் ஈடுபட்டார். இதனால் மும்பை அணியின் ரன்ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 82 ரன்கள் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் அவுட்டாகினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: