Home /News /sports /

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்

மார்க் பவுச்சர்

மார்க் பவுச்சர்

ஓய்வுக்குப் பிறகு அவர் தென்னாப்பிரிக்காவின் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். மேலும் அந்த அணியை ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெறுவதற்குஉறுதுணையாக இருந்தார் பவுச்சர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரில் செம உதை வாங்கியது. அதற்காகத்தான் வருந்தி ஓய்வு பெறுகிறாரோ என்று பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் பணமழைப் பதவிக்காக ராஜினாமா செய்திருப்பது இப்போதுதான் புரிகிறது. மார்க் பவுச்சர் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என ஒரு பிரபல கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்தார்.விக்கெட் கீப்பரால் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவிப்பு

ஓய்வுக்குப் பிறகு அவர் தென்னாப்பிரிக்காவின் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.  மேலும் அந்த அணியை  ஐந்து முறை சாம்பியன்  பட்டம் பெறுவதற்குஉறுதுணையாக இருந்தார் பவுச்சர்.

2019 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம், மார்க் பவுச்சரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது. இந்த பொறுப்பின் கீழ் அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு 11 டெஸ்ட் வெற்றிகள், 12 ஒருநாள் மற்றும் 23 டி20 வெற்றிகளைப் பெற்றுத்தந்தார்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், “மார்க் பவுச்சரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தான் ஒரு சிறந்த பயிற்சியாளர் என்பதை களத்தில் பல்வேறு முறை நிரூபித்துள்ளார்.

ரிட்டையர்மெண்ட் கிளப்புக்கு பெடரரை வரவேற்று செரீனா உருக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணியை தனது அனுபவம் மற்றும் திறமையால் முன்னெடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.

மார்க் பவுச்சர் கூறுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம். கிரிக்கெட் உலகில் மும்பை இந்தியன்ஸ் அணி பல சாதனைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் என்கிற முறையில் எனக்கு மிகப்பெரும் சவால் காத்திருக்கிறது.

என்னிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயங்களை நிச்சயம் செய்வேன். இது சிறந்த தலைமை மற்றும் வீரர்களைக் கொண்ட வலுவான அணி. இந்த சுறுசுறுப்பான அணிக்கு  மதிப்பு சேர்க்க விரும்புகிறேன்." என்றார் மார்க் பவுச்சர்.
Published by:Musthak
First published:

Tags: Cricket, Mumbai Indians

அடுத்த செய்தி