Home /News /sports /

வெளுத்து வாங்கிய இளம்புயல்கள்... ப்ளே ஆப்க்கு முன்னேற மும்பை வெறித்தனமான ஆட்டம்

வெளுத்து வாங்கிய இளம்புயல்கள்... ப்ளே ஆப்க்கு முன்னேற மும்பை வெறித்தனமான ஆட்டம்

MI vs SRH

MI vs SRH

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் அதிரயால் மும்பை அணி 235 ரன்கள் குவித்துள்ளது.

    ஐபிஎல் 2021 தொடரின் 55-வது லீக் போட்டியில் ஹைதராபாத் - மும்பை அணிகள் அபுதாபி மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணி ப்ளே ஆப் சுற்றுக்க தகுதி பெற வேண்டுமானால் ஹைதராபாத் அணியை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

    இதனால் மும்பை அணி ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கை நிர்ணயக்க ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர் இஷான் கிஷான் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை நான்குபுறமும் சிதறவிட்டார். 32 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரிகள் 4 சிக்ஸ்ர்கள் விளாசி 84 ரன்கள் அடித்து அவுட்டாகினார்.

    மும்பை அணி மற்றொரு இளம்வீரர் சூர்யகுமார் யாதவ் இறுதி ஓவர்களில் ரன்வேட்டையில் ஈடுபட்டார். இதனால் மும்பை அணியின் ரன்ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 82 ரன்கள் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் அவுட்டாகினார்.

    மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் அடித்தது. இதையடுத்து ஹைதராபாத் அணியை குறைந்த ரன்களில் அவுட்டாக்கி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற மும்பை அணி முனைப்பு காட்டி வருகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: IPL 2021

    அடுத்த செய்தி