14-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னிங்ஸை ரோகித் ஷர்மா - கிறிஸ் லின் தொடங்கினர். 4-வது ஓவரில் சாஹல் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து மிரட்டிய ரோஹித் அதே ஓவரில் தேவையில்லாத ரன் அவுட்டில் சிக்கினார். கிறிஸ் லின் தான் முதலில் கால் செய்து இரண்டு அடி முன்னால் வந்தார். பந்து கோலி வசம் சென்றதும் லின் பின்வாங்கினார். ரோஹித் பாதிதூரம் வந்து திரும்பினார். அதற்குள் கோலி பந்தை சாஹல் வசம் வீச ரோஹித் ரன் அவுட்டானார். 19 ரன்களில் ரோஹித் வெளியேறினார்.
இதனையடுத்து சூர்யா குமார் யாதவ் களமிறங்கினார். முதல் பந்தில் இருந்தே தனது அதிரடியை தொடங்கினார். முதல் 6 ஓவர் முடிவில் மும்பை அணி 41 ரன்கள் எடுத்திருந்தது. பவர்ப்ளே-க்கு பிறகு கியரை மாற்றியது மும்பை அணி. சாஹல் ஓவரில் அதிரடி காட்டினார் லின். ஒரு சிக்ஸ்ர், பவுண்டரி விளாசினார். ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் இருவரும் ஆடினர். மும்பை அணி 10 ஓவர்களுக்கு 86 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சூர்ய குமார் யாதவ் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேமிசன் ஓவரில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
13-வது ஒவரை வீச வாசிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் பவுண்டரி விளாசிய மிரட்டிய லின் சுந்தர் பந்துவீச்சில் அவரிடமே கேட்சாகி அவுட்டார். மும்பை அணிக்காக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய லின் 49 ரன்களில் அவுட்டானார். விக்கெட்டுகள் ஒரு புறம் வீழ்ந்தாலும் இஷான் கிஷான் மிரட்டிக்கொண்டிருந்தார். இவருடன் ஹர்திக் பாண்டியா இணைந்தார். இரண்டு பவுண்டரிகளை விளாசிய நிலையில் ஹர்திக் பாண்ட்யா , ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். ஹர்திக் 13 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். 18வது ஓவரில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய இஷான் கிஷானை அடுத்த பந்திலே எல்.பி.டபிள்யூ ஆக்கினார் ஹர்ஷல் பட்டேல் . 28 ரன்களில் இஷான் கிஷான் நடையைக் கட்டினார்.
20-வது ஓவரை வீச மீண்டும் ஹர்ஷல் பட்டேல் வந்தார். அவரது பந்துவீச்சில் அடுத்தடுத்து க்ருணால் பாண்டியா, பொல்லார்ட் கேட்ச் கொடுத்து வெளியேறினர். மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பு 159 ரன்கள் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஹர்ஷல் பட்டேல் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2021, Mi, Pollard, RCB, Rohit sharma, Virat Kohli, Washington Sundar