ஐபிஎல் 2021: கட்டுக்கோப்பான பந்துவீச்சு.. 5 விக்கெட் வீழ்த்திய ரஸல்.. திணறிய மும்பை பேட்ஸ்மேன்கள் - கே.கே.ஆர்-க்கு 153 ரன்கள் இலக்கு

ஐபிஎல் 2021: கட்டுக்கோப்பான பந்துவீச்சு.. 5 விக்கெட் வீழ்த்திய ரஸல்.. திணறிய மும்பை பேட்ஸ்மேன்கள் - கே.கே.ஆர்-க்கு 153 ரன்கள் இலக்கு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் பவர்ப்ளேயில் முதல் 5 ஓவர்கள் ஸ்பின்னர்களை மட்டுமே பயன்படுத்தினார்.

  • Share this:
    நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா ஆடும் லெவனின் மாற்றங்கள் எதுவும் இல்லை. மும்பை அணியில் குவாரண்டைனில் இருந்து திரும்பிய குவிண்டன் டி காக் அணியில் சேர்க்கப்பட்டார். கிறில் லீன் உட்காரவைக்கப்பட்டார். மும்பையின் இன்னிங்ஸை ரோஹித் ஷர்மாவும், குவிண்டன் டி காக்-கும் தொடங்கினர். சேப்பாக்கம் மைதானம் கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் ஹர்பஜன் சிங்கை பந்துவீச அழைத்தார். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

    இந்நிலையில் இரண்டாவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் குவிண்டன் டி காக் கேட்ச் கொடுத்து அவுட்டானார். டி காக் 2 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து சூர்ய குமார் யாதவ் களமிறங்கினார். ரோஹித் ஷர்மா, சூர்ய குமார் யாதவ் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் பவர்ப்ளேயில் முதல் 5 ஓவர்கள் ஸ்பின்னர்களை மட்டுமே பயன்படுத்தினார். ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் பந்துவீசினர்.

    https://tamil.news18.com/news/sports/ipl-deepak-hooda-smashed-his-fifty-in-20-balls-in-ipl-by-an-uncapped-indian-hrp-446657.html

    6-வது ஓவரில் தான் வேகப்பந்துவீச்சாளரை மோர்கன் கொண்டு வந்தார். 6-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். பவர் ப்ளே முடிவில் மும்பை அணி 1 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. பவர் ப்ளேக்கு பின்னர் சூர்ய குமார் யாதவ் அதிரடியில் இறங்கினார். அரை சதத்தை கடந்த சூர்ய குமார் யாதவ் ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் சுப்மான் கில் வசம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

    இதனையடுத்து இஷான் கிஷான் களமிறங்கினார். 1 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்காரணமாக மும்பை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். கே.கே.ஆர் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். இதன்காரணமாக ரோஹித், பாண்ட்யா இருவரும் பெரிய ஷாட்டுகளை ஆடவில்லை. 16-வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார்.

    ரோஹித் ஷர்மா 32 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்டியா வெளியேறினார். களத்தில் பொல்லார்ட், க்ருணல் பாண்ட்யா இருவரும் இருந்ததால் மும்பை அணி கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்தது . 17-வது ஓவரை ரஸல் வீச வந்தார். பொல்லார்டை காலி செய்தார் ரஸல். 5 ரன்கள் எடுத்த நிலையில் பொல்லார்ட் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 20-வது ஓவரில் ரஸலின் பந்துவீச்சில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசிய க்ருணால் பாண்ட்யா மூன்றாவது பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 152 ரன்கள் எடுத்தது. ரஸல் இரண்டு ஓவர்களில்  15 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
    Published by:Ramprasath H
    First published: